Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இந்த விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுவதுதான் அவர்களுக்கு நல்லதாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் சாணக்கிய நீதி இன்றும் பிரபலமாக இருக்கும் நீதி நூலாகும். காதல், திருமணம், தொழில், செல்வம் என எதுவாக இருந்தாலும், சாணக்கியர் அவற்றுக்கென சில விஷயங்களைக் கணித்துள்ளார். சாணக்கியர் திருமண வாழ்க்கைப் பற்றி சில விஷயங்களை விரிவாகக் கூறியுள்ளார். திருமண வாழ்க்கையில், கணவனும் மனைவியும் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள் உள்ளன.
திருமண வாழ்வில் தம்பதிகளிடையே வெளிப்படையாகப் பேசாததால் சிறிய பிரச்சினைகள் கூட நாளடைவில் பெரிய பிரச்சினைகளாக மாறுகின்றன. இதில் மிகவும் முக்கிய விஷயம் என்னவென்றால், நல்ல மற்றும் கெட்ட விஷயங்களைப் பற்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.

உறவு சீராக இருக்கவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும் தம்பதிகள் வெளிப்படையாகப் பேச வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உரிமைகளைப் பற்றி பேச வேண்டும்
திருமண உறவில் கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். இது தயக்கத்தாலேயோ அல்லது மரியாதையாலேயோ தள்ளிப் போட வேண்டிய விஷயமல்ல. தம்பதிகளிடையே வெளிப்படைத்தன்மை பெரும்பாலும் உறவை ஆழமாக்குகிறது. அதுமட்டுமின்றி, சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் இதுபோன்ற விஷயங்களை விவாதிக்கத் தயங்கக்கூடாது. அதைப்பற்றி முன்கூட்டியே தெளிவாகப் பேசுவது எப்போதும் நல்லது.
பொறுப்புகள் பற்றி விவாதிக்க வேண்டும்
குடும்பப் பொறுப்பு பொறுப்பு என்பது கணவருக்கு மட்டுமே உரியதென மனைவி நினைத்தால் அது உறவை விரைவில் நெருக்கடிக்குள் தள்ளும். ஆனால் உங்கள் உரிமைகளை நிலைநிறுத்துவதன் மூலமும் பொறுப்புடன் விஷயங்களைக் கையாள்வதன் மூலமும் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றலாம். தங்களின் உரிமைகளை தயக்கமின்றி வெளிப்படுத்தும் போதுதான் அவர்கள் தங்கள் பொறுப்புணர்வை உணருவார்கள்.
காதலை வெளிப்படுத்த தயங்கக்கூடாது
காதல் எப்போதுமே மனதில் பூட்டி வைக்க வேண்டிய விஷயமல்ல, காதலைப் பற்றி தங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேச வேண்டியது அவசியம். பெரும்பாலும் காதலை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது திருமணத்தில் சலிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் பிற்காலத்தில் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன. காதலை வெளிப்படுத்தும்போதுதான் அது வாழ்க்கையை அழகாக்குகிறது.
அர்ப்பணிப்பு
தம்பதிகள் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். எதிலும் தயக்கம் இருக்கக் கூடாது என்பது திருமண வாழ்வில் மிகவும் முக்கியமானது. இது உறவுக்கு ஆழத்தையும் உறுதியையும் தருகிறது. மேலும் இது அவர்களின் உறவை பலப்படுத்துகிறது. எனவே திருமண உறவைப் பற்றி சிந்திக்கும்போது, நீங்கள் அதை ஆழமாகப் புரிந்துகொண்டு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும்.
கோபத்தையும், வெறுப்பையும் மறைக்கக் கூடாது
எந்த சூழ்நிலையிலும் உங்கள் கோபத்தையும், வெறுப்பையும் மறைக்கக் கூடாது. ஏனென்றால் அது உங்களுக்கு வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக அவற்றைப் பற்றி பேசவும். மேலும் உங்கள் உணர்வுகளை நேர்மையாக முன்வைக்க கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது வாழ்க்கையில் அதிக சவால்களை உருவாக்கும்.



Click it and Unblock the Notifications
