Latest Updates
-
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான்... உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணரும், இராஜதந்திரியுமான சாணக்கியர் மனித நடத்தை, உறவுகள் மற்றும் ஆட்சிமுறை குறித்த அவரின் ஞானத்திற்காகப் புகழ்பெற்றவர். சாணக்கிய நீதி என்ற அவரது புகழ் பெற்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரது அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள், வெற்றிகரமான உறவுகளைப் பேணுவது உட்பட, பல பயனுள்ள வாழ்க்கை பாடங்களை உள்ளடக்கியுள்ளன.
சாணக்கிய நீதியில் ஒரு நல்ல மனைவிக்கு இருக்க வேண்டிய குணங்கள் குறித்த சாணக்கியரின் அறிவுரை, திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்திற்கான ஒரு தனித்துவமான வழிகாட்டியாக உள்ளது. இந்த பதிவில் , சாணக்கியரின் அறிவுரையின் படி, ஒரு அன்பான மற்றும் உறுதியான திருமணத்தை உருவாக்க ஒரு மனைவியிடம் இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல மனைவி கொண்டிருக்க வேண்டிய மிகவும் முக்கியமான நற்பண்புகளில் பொறுமையும் ஒன்றாகும். பொதுவாக திருமண வாழ்க்கையில் சவால்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. இதுபோன்ற தருணங்களில், திருமண உறவை பாதுகாப்பதிலும், நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் ஒரு மனைவியின் பொறுமை முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, ஒரு நல்ல மனைவி அமைதியாகவும், நிதானமாகவும் இருந்து, சூழ்நிலைகளை நேர்த்தியுடன் கையாளுவார்.
திருமண வாழ்க்கையில் சவால்களும், பிரச்சினைகளும் தவிர்க்க முடியாதவை, ஆனால் அந்த சூழலில் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது அந்த உறவை வலுப்படுத்தவோ அல்லது சிதைக்கவோ கூடும். பொறுமைசாலியான மனைவி அமைதியாக இருந்து, தனது நற்குணத்தின் மூலம் மோதல்களைத் தீர்த்து, குடும்பத்தில் அமைதியை உறுதி செய்வார்.
அறிவாற்றல்
சாணக்கிய நீதி படி, ஒரு நல்ல மனைவிக்கு அறிவும், விவேகமும் இருக்க வேண்டும். அறிவு என்பது கல்வியை மட்டுமே பொறுத்தே நிர்ணயிக்கப்படுவதில்லை, மாறாக வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய புரிதலையும், சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் குறிக்கிறது. ஒரு மனைவியின் ஞானமே, குடும்பத்தை நிர்வகிப்பதற்கும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், தேவைப்படும்போது வழிகாட்டுதல் வழங்குவதற்கும் உதவுகிறது. மனைவியின் விவேகம், குடும்ப விஷயங்களைக் கையாள்வதற்கும், உறவுகளைப் பேணி வளர்ப்பதற்கும், துன்ப காலங்களில் தன் கணவனுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உதவும்.
விசுவாசம் மற்றும் நேர்மை
எந்தவொரு வெற்றிகரமான உறவிற்கும் விசுவாசமே அடித்தளமாக இருக்குமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார், இதற்கு திருமண உறவும் விதிவிலக்கல்ல. ஒரு நல்ல மனைவி தன் கணவனுக்கு உணர்ச்சிரீதியாகவும், உடல்ரீதியாகவும் விசுவாசமாக இருக்க வேண்டும். அவரின் விசுவாசமே உறவில் நம்பிக்கையை வளர்க்கிறது, அதுவே அவர்களின் திருமணத்தை பாதுகாக்கும்.
திருமணமான தம்பதிகளுக்குள் இருக்கும் நம்பிக்கையே அவர்களின் ஆழ்மன எண்ணங்கள், அச்சங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விசுவாசமுள்ள ஒரு மனைவி, எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை நம்பலாம் என்ற பாதுகாப்பைத் தன் கணவனுக்கு அளிக்கிறார். இந்த அசைக்க முடியாத விசுவாசம் ஒரு வலுவான மற்றும் நீடித்த உறவுக்கு அவசியமானதாகும்.
புரிதல் மற்றும் இரக்கம்
தன் கணவரின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் ஒரு மனைவி, இரக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் உறவை வலுப்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். புரிதலும் இரக்கமும் ஒவ்வொரு மனைவியும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான நல்ல குணங்களாகும். ஒரு மனைவியின் முக்கிய கடைமை, தன் கணவரின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்துகொண்டு, அவருடன் இணக்கமாக நடந்துகொள்வதுதான் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
கணவர் சுமையாக உணரும்போது அவருக்கு ஆதரவளித்து, துன்ப காலங்களில் ஆறுதல் அளிக்கும் அவரது உணர்ச்சிப்பூர்வமான ஆதாரமாக அவர்கள் இருக்க வேண்டும். புரிதலும், இரக்கமும் உள்ள ஒரு மனைவி தன் கணவருடன் ஒரு வலுவான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை உருவாக்க முடியும்.
சுதந்திர உணர்வு
சாணக்கிய நீதியின் படி ஒரு நல்ல மனைவி தன் கணவருக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில் அவர் தன்னுடைய சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது. ஒரு நல்ல மனைவி தன் சொந்தக் காலில் நிற்கும் வலிமையையும், தன் இலக்குகளைப் பின்தொடரும் திறனையும், குடும்பத்திற்கு பங்களிப்பை வழங்கும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தன் வாழ்க்கையை நிர்வகிக்கும் நம்பிக்கையையும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். குடும்பத்தின் நலனுக்குப் பங்களிக்கும் ஒரு சுதந்திரமான மனைவி, ஒரு சமநிலையான மற்றும் மரியாதைக்குரிய திருமண உறவை உருவாக்குவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
