Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்... உங்ககிட்ட எத்தனை இருக்கு?
சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த இராஜதந்திரி ஆவார். ஏறக்குறைய எல்லா விஷயங்களிலும் அவருக்கு சிறந்த ஞானமும், புரிதலும் இருந்தது. சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரின் தந்திரத்தால்தான் பேரரசனாக்கப்பட்டார்.
சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. பின்பற்றுவதற்கு கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் பின்பற்ற கற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

சாணக்கியரின் அனுபவம் மற்றும் ஞானத்தின் தொகுப்பே அவரின் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதியாகும். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பது பற்றிய முக்கியமான தகவல்களை சாணக்கிய நீதி வழங்குகிறது.
சாணக்கியரின் கூற்றுப்படி ஒருவரிடம் உள்ள 5 குணங்கள் அவரை அறிவாளியாக்குகின்றன. அந்த குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நெருக்கடியான சூழலில் அமைதியாக இருப்பது
கடினமான மற்றும் துன்பமான நேரங்களிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நபர் சிறந்த புத்திசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் நெருக்கடியான காலகட்டங்களில் எடுக்கும் அவசர முடிவுகள் பிற்காலத்தில் உங்களைக் காயப்படுத்தும். எனவே நெருக்கடியான காலக்கட்டங்களில் ஏற்படும் போது, உங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல், கோபத்தை வெளிக்காட்டாமல் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, சரியான முடிவெடுக்க வேண்டும்.
தவறு செய்யாக்கூடாது
சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் ஞானி என்று அழைக்கப்படுவார். எனவே ஒரு நபர் எப்போதும் தவறான செயல்கள் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
திட்டங்களை ரகசியமான வைத்திருப்பது
சாணக்கியர் தனது எதிர்கால திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பவர்களை சிறந்த புத்திசாலி என்று கூறுகிறார். ஏனென்றால், ஒரு வேலையை முடிப்பதற்குள் யாராவது அதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவித்தால், அந்த வேலை தடைபட வாய்ப்புள்ளது. சாணக்கியரன் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திட்டங்கள் வெற்றியை அடையும் வரை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
இலக்கை ஒருபோதும் தவற விடக்கூடாது
தனது இலக்கை அடைவதற்காக உழைத்து, எந்தத் தடைகளையும் அச்சமின்றி சமாளிக்கும் திறன் கொண்டவர்தான் உண்மையான அறிவாளி என்கிறார் சாணக்கியர். நேரம் அல்லது கடினமான சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கும் நபர்கள் வெற்றியை அடைய நீண்ட காலம் தேவைப்படாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
பக்தி
ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள் ஞானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பதால் அவர்கள் எப்போதும் ஞானமுள்ளவராக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே எப்போதும் ஆன்மீக வழியைப் பின்பற்ற வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications

