Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருப்பவர்கள் பெரிய தலைவராக வருவதற்கு வாய்ப்பிருக்காம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். சாமானியனாக இருந்த சந்திரகுப்தர் மௌரியப் பேரரசராக மாறியது அவரது கொள்கைகளின் பலத்தால் தான். சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. இன்றும் மக்கள் சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.
இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற முடியும். சாணக்கியர் தனது நீதிநூலில் ஒரு நல்ல தலைவனின் குணங்களை குறிப்பிட்டுள்ளார். இந்த குணங்களை பின்பற்றினால் நீங்களும் தலைவராக மாறலாம். சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு நல்ல தலைவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவருக்குத் தேவையான முதல் குணம் பொறுமை. அதன் மூலம் யார் வேண்டுமென்றாலும் எந்த வேலையையும் கச்சிதமாக செய்ய முடியும். பொறுமையாக இருப்பதன் மூலம், உங்களின் கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். எனவ, நீங்கள் ஒரு தலைவராக வளர வளர்த்துக் கொள்ள வேண்டிய முதல் விஷயம் பொறுமை.
திட்டமிடுதல்
சாணக்கியரின் கூற்றுப்படி, திட்டமிட்டு வேலை செய்பவர் மட்டுமே நல்ல தலைவராக இருக்க முடியும். கடினமான சூழ்நிலையிலிருந்து வெளிவர எப்போதும் ஒரு திட்டத்தை வைத்திருங்கள். ஒரு நல்ல தலைவர் தன் திட்டங்களை எப்போதும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
கவனம்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு வேலையும் முடிவடையும் வரை கவனத்துடன் இருந்தால் மட்டுமே ஒரு நல்ல தலைவராக மாற முடியும். வெற்றியை முழுமையாக அடைவதற்குள் கொண்டாடுவதை நிறுத்துங்கள். எனவே ஒரு நல்ல தலைவர், திட்டங்கள் வெற்றி பெறும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆலோசனை பெற தயாராக இருக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு வேலையைத் திட்டமிடும் முன் குழுவின் உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்பவரே ஒரு நல்ல தலைவர். இது வேலை செய்ய ஒரு உறுதியான திட்டத்தை கொண்டு வருகிறது. எனவே வெற்றி வாய்ப்பும் கூடுகிறது. அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று முன்னேறுபவர்கள் தான் நல்ல தலைவராக வர முடியும்.
சரியான நேரத்தில் சரியானதை செய்ய வேண்டும்
ஒரு நல்ல தலைவர் சரியான நேரத்தில் தனது கடமைகளை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு தலைவன் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரே வழி இதுதான். ஒரு நல்ல தலைவர் எப்போதும் நேரத்தின் மதிப்பை புரிந்து கொண்டவராக இருப்பார்.
ஒருமுறை இழந்த நேரத்தை திரும்பப் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். முடிவுகளை தாமதப்படுத்துவது குழுவின் வளர்ச்சியைக் குறைக்கும். நீங்கள் சரியான நேரத்தில் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றால், அவை பெரும்பாலும் தீர்க்க முடியாத பெரிய பிரச்சினைகளாக மாறும்.
நேர்மை
நேர்மை அவசியமான குணம்தான், ஆனால் அதிகப்படியான நேர்மை தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களை அவர்களின் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். எனவே நேர்மையாகவும் அதேசமயம் புத்திசாலித்தனமாகவும் இருப்பது ஒரு நல்ல தலைவரின் குணமாகும்.



Click it and Unblock the Notifications
