Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் பெரிய உயரத்தை அடைவார்களாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதியில் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் கூறப்பட்டுள்ளது. நீங்கள் சாணக்கிய நீதியைப் பின்பற்றினால், வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவரின் குணமும் நடத்தையும் அவருக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதை அளிக்கிறது. சமுதாயத்தில் மரியாதையைப் பெறுவார்.
மக்கள் அவரை ஒரு ஜென்டில்மேன் என்றும் அறிவார்கள். ஆனால், இவையனைத்தும் நமது நல்ல இதயத்தாலும் நேர்மையான வாழ்க்கை முறையாலும் மட்டுமே சாத்தியமாகும். சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ நமது நல்ல குணங்கள் உதவுகின்றன.

நேர்மை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவை மனிதர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளாகும். நாம் சரியான பாதையில் சென்றால் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நமது நடத்தையே நமது ஆளுமையை உருவாக்குகிறது. ஆச்சார்யா சாணக்கியர், ஒருவரிடம் இருக்கும் எந்தெந்த குணங்கள் அவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று கூறுகிறார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் மிக முக்கியமான குணம் பொறுமை. பல சமயங்களில் பொறுமை ஒரு வரமாகவும் இருக்கலாம். பொறுமையாக இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும் சரியாகச் சிந்தித்து முடிவெடுத்து அந்தச் சூழ்நிலையை எளிதில் சமாளிப்பார்.
விதியின் விளையாட்டால் கடல் கூட சில சமயங்களில் தன் எல்லையை மீறுகிறது, கரையை விழுங்கி பேரழிவை ஏற்படுத்துகிறது மற்றும் மக்களை துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், சகிப்புத் தன்மை உடையவர்கள், இப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலைகளிலும் அவர் பொறுமையை இழப்பதில்லை. இந்த குணம் வெற்றிக்கான பாதையை நோக்கி அவர்களை அழைத்துச்செல்லும்.
நேர்மை
இது அனைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும். நேர்மையே மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான வாழ்க்கைக்கான பாதையாகும். எனவே எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்களின் நேர்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
நேர்மையை சமரசம் செய்துகொள்ளும் போது வாழ்க்கையில் வழிதவற வாய்ப்பு அதிகமாகும். நேர்மையானவர்களை சமூகமும் மதிக்கிறது. அவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் வெற்றியை அடைகிறார்கள். எனவே வாழ்க்கையில் நேர்மை மிகவும் முக்கியமானது என்கிறார் ஆச்சார்யா சாணக்கியர்.
அலட்சியமின்மை
எந்த சூழ்நிலை வந்தாலும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டு எதையும் அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆச்சார்ய சாணக்கியர் ஒருவர் தனது தீவிரத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
ஒரு மோசமான சூழ்நிலை உங்களுக்கு முன்னால் வந்தால், உங்கள் கவனத்தை விட்டுவிடாதீர்கள் என்று ஆச்சார்யா கூறுகிறார். ஜென்டில்மேன்கள் அவர்களின் குணம், தீவிரம் மற்றும் நடத்தை மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.
பொறுப்பான நிர்வாகம்
தன் குடும்பப் பொறுப்பை தன்னலமின்றியும், திறமையுடனும் செய்பவர் ஜென்டில்மேன் என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெறுவார்கள் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர்.



Click it and Unblock the Notifications

