Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல அப்பாவாகவும், குடும்பத் தலைவைராகவும் இருக்க மாட்டார்களாம்!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான ஒரு அறிஞராவார். சாணக்கியர் குடும்பம், செல்வம், தொழில், நட்பு மற்றும் திருமண வாழ்க்கை என அனைத்து விஷயங்களையும் பற்றி தனது நூல்களில் விளக்கியுள்ளார். சாணக்கியரின் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதி மனிதர்கள் தொடர்பான பல விஷயங்களையும் அவர்களில் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.
ஒரு குடும்பத்தை எப்படி நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். குடும்பத் தலைவர் எப்படி இருக்கக் கூடாது, என்ன செய்யக் கூடாது மற்றும் குடும்ப வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டுமென்று சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அலட்சியமாக செலவு செய்யக்கூடாது
குடும்பத்தலைவர் எப்போதும் பணத்தை பொறுப்புடன் கையாள வேண்டும். அவர் பணத்தை அலட்சியமாக செலவு செய்பவராக இருந்தால், குடும்பத்தின் நிலை மோசமாகி விடும். சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை செலவழிக்கும் விஷயத்தில், குறிப்பாக அவர் குடும்பத்தின் தலைவராக இருந்தால், அவர் பொறுப்புணர்வுடனும், பணத்தை சேமிக்கக்கூடிய நபராகவும் இருக்க வேண்டும். ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள் குடும்பத் தலைவராக இருந்தால் அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொறுப்பின்மை
குடும்பத் தலைவர் கவனம் செலுத்த வேண்டிய மற்றும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் விஷயம் குடும்பப் பொறுப்பு. ஆனால் இது இல்லாத ஆண்கள் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கி குடும்பத்தினரின் வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள். குடும்பத்திற்குத் தேவையான அனைத்து கடமைகளையும் பொறுப்புடன் செய்யத் தயாராக இருப்பவர்தான் குடும்பத் தலைவராக சமூகத்தில் மதிக்கப்படுவார்கள்.
தீர்மானத்தில் உறுதி இல்லாமல் இருப்பது
ஆண்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இல்லாமல் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிரமமாகத்தான் இருக்கும். பெரும்பாலும் குடும்பத் தலைவராக இருப்பதால், எந்த ஒரு முடிவிலும் அவர்கள் பின்வாங்கக் கூடாது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல குடும்பத் தலைவருக்கு எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் திறன் அவசியம். அப்போதுதான் குடும்பம் முன்னேறும்.
ஒழுக்கமின்மை
குடும்பத் தலைவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாகவும், தங்கள் குடும்பத்தை கவனிக்காதவர்களாகவும் இருந்தால், அவர்கள் அந்த குடும்பத்திற்கு சாபம் போன்றவர்கள். அவர்களால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்க முடியாது, மேலும் அவர்கள் குடும்பத்தின் நிம்மதியையும் கெடுப்பார்கள். அத்தகைய ஆண்கள் தங்கள் குடும்பத்திற்கு நெருக்கடியான சூழ்நிலையில் தள்ளுவார்கள். எனவே அவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விசுவாசமில்லாதவர்கள்
ஒரு நல்ல குடும்பத்தலைவர் ஆதாரம் இல்லாமல் யாரையும் எதையும் நம்பாதவராக இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் கேள்விப்பட்ட அனைத்தையும் ஒருவர் நம்பினால், அது அந்தக் குடும்பத்தில் குழப்பங்களை உண்டாக்குகிறது. அப்படிப்பட்டவர்கள் நல்ல குடும்பத் தலைவராக இருக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
