Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
சாணக்கிய நீதி படி இந்த 3 இடங்களில் லட்சுமி தேவி எப்போதும் வசிப்பாராம்... இங்க பணக்கஷ்டமே வராதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் இராஜதந்திரி என்று கருதப்படுகிறார். மனித வாழ்க்கையை எப்படி நடத்துவது மற்றும் எப்படி வெற்றி பெறுவது என்று என்பது பற்றி பல விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
நிதிநிலை மற்றும் லட்சுமி தேவியைப் பற்றி சாணக்கியர் பல விஷயங்களைக் கூறியுள்ளார். லட்சுமி தேவி எப்போதும் பயணத்தில் இருப்பவர் என்று அவர் நம்பினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், லட்சுமி தேவியை எப்போதும் ஒரே இடத்தில் வைத்திருப்பது கடினம். இருப்பினும், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான சில இடங்கள் உள்ளன. லட்சுமி தேவி இந்த இடங்களை எளிதில் நகர்வதில்லை.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு வசனத்தில் லட்சுமி தேவி வசிக்கும் இடத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் குறிப்பிடும் இந்த இடங்களில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. அத்தகைய வீட்டில் உள்ளவர்கள் ஒருபோதும் வறுமையை எதிர்கொள்ள மாட்டார்கள். லட்சுமி தேவி எப்போதும் வசிக்கும் இடங்கள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புத்திசாலிகள் உள்ள வீடு
சிலர் முட்டாள்களாக இருந்தாலும் புத்திசாலிகள் போல் நடிக்கிறார்கள் என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார். கற்றறிந்த மற்றும் நல்லொழுக்கமுள்ள மக்கள் மதிக்கப்படும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறார். முட்டாள்களின் வார்த்தைகள் மதிப்பற்றவை. முட்டாள்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காத வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறார்.
முட்டாள்கள் அல்லது அவர்களின் முட்டாள்தனமான வார்த்தைகளை நம்புவதன் மூலம் இலக்கை நோக்கி செல்வோர் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் முட்டாள்களின் அறிவுரையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது, ஆனால் அறிவுள்ள ஒருவரின் அறிவுரையை தாராளமாகி பின்பற்றலாம். சரியான பாதையில் தனது இலக்கை அடையும் நபருடன் லட்சுமி தேவி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்.
தானியம் நிறைந்திருக்கும் இடம்
சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி தேவி உணவு பற்றாக்குறை இல்லாத வீட்டில் அல்லது தானியங்கள் நிறைந்த வீட்டில் வசிக்கிறார். தானியக் களஞ்சியங்களில் தானியங்கள் தீராத வீடுகளில் அன்னபூரணி மற்றும் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நிலைத்திருக்கும்.
எனவே உங்கள் தானிய களஞ்சியத்தை முழுமையாக வைத்திருக்க கடினமாக உழைக்கவும். உணவு தானியங்களுக்கு ஒருபோதும் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. மேலும், உணவை அவமதிக்காதீர்கள். இப்படிச் செய்வதால் லட்சுமி தேவியின் கோபம், பணக்காரனைக் கூட ஏழையாக்குகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் செல்வமும் தானியங்களும் இருக்காது.
மகிழ்ச்சியான குடும்பம்
குடும்ப ஒற்றுமையும் அன்பும் செழிப்பின் அடையாளம். குடும்பத்தில் பரஸ்பர அன்பும் சகோதரத்துவமும் இருக்கும் இடத்தில், லட்சுமி தேவி ஈர்க்கப்படுகிறார். அத்தகைய வீடுகளில் பணத்திற்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்காது மற்றும் செழிப்பும் நிலவுகிறது என்று சாணக்கியர் கூறுகிறார். மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல அதிர்ஷ்டத்திற்கும் கணவன் மனைவி இடையே அன்பை பேணுவது மிகவும் அவசியம்.
கணவன்-மனைவிக்குள் அன்பில்லாத வீட்டில் அடிக்கடி பிரிவினை, சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அப்படிப்பட்ட வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க லட்சுமி தேவி விரும்ப மாட்டார். லக்ஷ்மி தேவி அன்பும் நல்லிணக்கமும் நிறைந்த வீட்டை விரும்புகிறார். குடும்ப உறுப்பினர்களுக்கும், கணவன் மனைவிக்கும் இடையே அன்பு இருந்தால் அந்த வீட்டில் பிரச்னைகள் வராது. அத்தகைய வீட்டில் நிறைய அமைதி இருக்கும், மேலும் அந்த வீடுகளில் லட்சுமி தேவி எப்போதும் வசிக்கிறார்.
லட்சுமி தேவியின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும்?
ஒரு மனிதன் தன் நடத்தையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். லட்சுமி தேவி தவறாக நடந்துகொள்ளும் நபருடன் இருப்பதில்லை. செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மிகவும் நிலையற்ற தன்மை உடையவர். இதனால்தான் அவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தயாராக இருக்க வேண்டும். பணத்தை முறையாக கையாள்வதில் அறிவு இருக்க வேண்டும். இந்த குணம் இல்லாதவர்கள் வீட்டில் செல்வம் நீண்ட காலம் நிலைக்காது.
ஒருவர் தனது குணத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி தேவி ஒருபோதும் கோபமான நபரின் அருகில் நிற்க மாட்டார். யாரையும் அவமதிக்கவே கூடாது. மற்றவர்களை அவமானப்படுத்துபவருக்கு அல்லது அப்படிப்பட்ட உணர்வுகள் உள்ளவருக்கு வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications
