Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம்... உங்களுக்கு தெரியுமா?
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். அவருடைய கொள்கைகள் இன்றும் மக்களை வழிநடத்துவதாக உள்ளது. சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் விளக்கியுள்ளார். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மக்களின் வெற்றிக்காக பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். நீங்களும் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், ஆச்சார்ய சாணக்கியரின் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல. ஆனால் தொடர்ந்து சரியான பாதையில் நடப்பவர்களால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வெற்றிக்கான ரகசியங்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ரகசியங்களை அறிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வேலை செய்யுமிடத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, வாழ்க்கையில் வெற்றியைத் தரும் முதல் விஷயம், உங்கள் இலக்கை அடைய விரும்பினால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். பணிச்சூழல், வேலை செய்யுமிடம், சக பணியாளர்கள், சக ஊழியர்களின் அணுகுமுறை, வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், தங்கள் சூழ்நிலைகளை அறியாத ஒருவர் தனது வேலையில் தவறு செய்து தவிர்க்க முடியாத தோல்வியை சந்திப்பார்கள்.
நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும்
வெற்றியை அடைய நேரத்தின் தேவை என்ன மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை எஅவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் நேரத்தைப் பொறுத்து உங்களின் வேலையின் வேகம் இருக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியையும், வெற்றியையும் மனதில் வைத்து திட்டமிட வேண்டும். சூழ்நிலைகள் சாதகமாக இல்லாவிட்டாலும், நன்றாக உழைத்து, பொறுமையுடன் பணியைத் தொடர வேண்டும் என்கிறார் சாணக்கியர். பொறுமை இழந்தால் உங்கள் உழைப்பு வீணாகிவிடும் என்கிறார் சாணக்கியர்.
தங்கள் திறமையை உணர்ந்திருக்க வேண்டும்
வாழ்க்கையில் முன்னேற, மக்கள் தங்கள் திறனை மனதில் வைத்து செயல்பட முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் வெற்றிக்கான கதவுகள் ஒருபோதும் அவர்களுக்குத் திறக்காது. அனைவருக்குமே அவர்களின் திறமை மீது நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது, அதை உங்களால் செய்ய முடியுமா என்று உங்களுக்குள் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
மக்களை அடையாளம் காண வேண்டும்
நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்கிறார் சாணக்கியர். ஏனென்றால் உண்மையான நண்பர்களின் உதவியால் உங்கள் வேலையை சிறப்பாகச் செய்ய முடியும். நண்பர்கள் போல வேடமணிந்து உதவிக்கு வரும் நண்பர்கள் உங்களை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இதனை தெரிந்து கொள்ளவில்லை என்றால் உங்கள் உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். எனவே மக்களின் உண்மையான முகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications












