Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவராக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சமுதாயத்தில் வாழும் அனைவருக்குமே மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். மக்கள் அவர்கள் சொல்வதற்கு மரியாதைக் கொடுத்து அவர்களைப் பாராட்ட வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால், பணத்தாலும் பதவியாலும் மட்டுமே ஒருவருக்கு மரியாதை கிடைக்காது. சாணக்கிய நீதியில் இப்படி சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எல்லோருக்கும் வெற்றியும் மரியாதையும் கிடைப்பதில்லை.
சாணக்கிய நீதியின் படி, ஒருவர் தனது வாழ்க்கையில் சில பழக்கங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே மரியாதையும், வெற்றியும் கிடைக்கும். அத்தகைய நபர் சமூகத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறார். சமுதாயத்தில் மரியாதை பெறவும், மற்றவர்களால் பாராட்டப்படவும் சில விஷயங்களை செய்ய வேண்டும். சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நேர்மையாக இருக்க வேண்டும்
உண்மையின் பாதையில் செல்பவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் சில காலம் கழித்து அவர்களின் நேர்மையின் பலனைப் பெறுவார்கள். அவர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக மாறுவார்கள். நேர்மையானவர் மற்றவர்களால் பாராட்டப்பட்டு கௌரவம் பெறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் உயர்நிலையை அடைகிறார்.
மற்றவர்களை மதிப்பவர்கள்
மரியாதைக்குரிய நபரை ஒரு சமூகம் எப்போதும் நினைவில் கொள்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால் மற்றவர்களை மதிப்பவர்களுக்கு மரியாதை தேடிவரும். பிறரை இழிவு படுத்தும் நபரை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் அதற்கு பதில் மரியாதை கிடைக்கும் என்கிறார் சாணக்கியர்.
பொறுப்புணர்வு
வாழ்க்கைப் பயணத்தில் தனது பணியின் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் நபர் மரியாதைக்குரியவர். ஒரு மனிதன் தன் செயல்களால் பெரியவனாகிறான் என்று கூறப்படுகிறது. அவர் தனது கடமைகளைச் சரியாகச் செய்தால், சமூகம் அவரைச் சாதகமாகப் பார்க்கும். அத்தகையவர்கள் எப்போதும் மற்றவர்களால் நேசிக்கப்படுவார்கள், மதிக்கப்படுவார்கள்.
அறிவை அளிப்பவர்கள்
சமுதாயத்தின் நலனுக்காக தனது அறிவைப் பயன்படுத்தும் ஒரு புத்திசாலி நபர் எப்போதும் மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருப்பார். அப்படிப்பட்டவர்கள் எப்போதும் பிறரால் விரும்பப்படுவார் என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் தனி மரியாதைக் கிடைக்கும். அதனால்தான் ஒரு புத்திசாலி மனிதன் எப்போதும் மக்களின் மனதை வெல்கிறார்கள். அவர்களின் அறிவு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.
மற்றவர்களை அவமதிக்காதவர்கள்
பிறரை விமர்சிப்பதும், கிண்டல் செய்வதும், மற்றவர்களின் மரியாதையைக் கெடுக்கும் பழக்கமும் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்காது. இந்தப் பழக்கவழக்கங்களைக் கொண்ட ஒருவரை, எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் மற்றவர்களின் மனதில் நல்ல இடத்தைப் பெற விரும்பினால், மற்றவர்களின் இமேஜை கெடுப்பதைக் கைவிடுங்கள்.
மற்றவர்களுக்கு தீமை செய்யக்கூடாது
சாணக்கிய நீதி படி, பொய் சொல்லி மற்றவர்களுக்குத் தீங்கு செய்பவர் வாழ்க்கையில் அடிக்கடி அவமானங்களைச் சந்திப்பார். ஆனால் கடின உழைப்பு மற்றும் உண்மையின் பாதையைப் பின்பற்றுபவர் எப்போதும் வெற்றியைப் பெறுகிறார். சுயமரியாதையுடன் வாழ்பவர் எப்போதும் மற்றவர்களிடம் மரியாதை பெறுவார்.



Click it and Unblock the Notifications
