Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 தவறுகளை செய்பவர்கள் இறந்த பிறகு நிச்சயம் நரகத்திற்குத்தான் செல்வார்களாம்...!
Chanakya Niti: இந்து மதம் மட்டுமின்றி உலகின் பல மதங்கள் மறுபிறவி மீது நம்பிக்கைக் கொண்டவையாக இருக்கின்றன. அதன்படி, ஒரு நபர் தனது முந்தைய பிறவிகளில் செய்த பாவ மற்றும் புண்ணியங்களின் பலன்களையே இந்த ஜென்மத்தில் பெறுகிறார் மற்றும் அவரது கடந்தகால வாழ்க்கையின் முடிவுகளை நிகழ்கால வாழ்க்கையில் பெறுகிறார்.
எனவே ஒரு மனிதன் எப்போதும் தனது செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறந்த பிறகும் துன்பப்பட வேண்டியிருக்கும். நல்ல செயல்களைச் செய்வதன் மூலம், ஒரு நபர் அடுத்த ஜென்மத்தில் நல்ல பலன்களைப் பெறுகிறார்.

சாணக்கியர் பண்டைய இந்தயாவின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் தத்துவஞானி ஆவார். வாழ்க்கையின் அனைத்து விஷயங்கள் மீதும் அவருக்கு ஒரு கண்ணோட்டம் இருந்தது. ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சில விஷயங்களை அறிவுறுத்துகிறார். மரணத்திற்குப் பிறகு ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பது ஒருவர் வாழும்போது செய்யும் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. சாணக்கிய நீதியில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தவறுகளை செய்பவர்கள் இறந்ததற்கு பிறகு நரகத்திற்கு செல்ல நேரிடும்.
தீய செயல்களை செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு தீயவன் இறந்த பிறகு நிச்சயம் நரகத்திற்குச் செல்கிறார். உறவினர்களை வெறுப்பவர்களையும், பெரியவர்களை அவமதிப்பவர்களையும் சாணக்கியர் தீயவர்கள் என்று கருதுகிறார். கர்மவினையால் பெற்றோரைக் காயப்படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.
கெட்ட செயல்களை செய்பவர்கள், கெட்ட குணம் கொண்டவர்கள், மற்றவர்களை சித்திரவதை செய்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். பிறரைத் துன்புறுத்துபவர்கள் வாழும் போதும் சரி வாழ்க்கைக்கும் சரி மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். அவர்கள் ஏதாவது ஒரு வடிவில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
பெண்களை மதிக்காதவர்கள்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெண்களை அவமரியாதை செய்பவர், பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக நடத்துபவர் மற்றும் ஏழைகளை சுரண்டுபவர் இறந்ததற்கு பிறகு நரகத்தைச் செல்கிறார். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை துஷ்பிரயோகம் செய்பவர் அல்லது சுரண்டுபவர் மிகப்பெரிய பாவிகளாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட பாவச் செயல்களுக்குப் பிரதிபலனாக அவர்கள் வாழ்நாளிலும், மரணத்திற்குப் பின்னரும் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
நல்லவர்களை காயப்படுத்துபவர்கள்
துன்மார்க்கன் எப்போதும் தன் வார்த்தைகளாலும், கெட்ட செயல்களாலும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மற்றவர்களுக்கு வலியை உண்டாக்குகிறார். மனிதனின் இந்த தீமைகள் அவரை நரகத்திற்கு அனுப்புகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
தனக்குப் பிரியமானவர்களைத் துன்புறுத்தி மகிழ்பவர்களுக்கு நிச்சயம் நரகத்தில் இடம் உண்டு. பொறாமை அவர்களை உள்ளிருந்து எரித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய நபர் ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதில்லை என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
பேராசை
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பேராசை கொண்ட ஒருவன் ஒருபோதும் யாராலும் நேசிக்கப்பட மாட்டான். பணம், சொத்து, மரியாதை பெறவும், தங்கள் சுயநலத்தை நிறைவேற்றவும் பிறருக்கு தீங்கு செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்த பிறகு நிச்சயம் நரகத்தை அனுபவிப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications












