Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் இருப்பவர்கள் பூமியிலேயே சொர்க்க வாழ்க்கையை பெறுவார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: மனித வாழ்க்கை எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. நீங்கள் சில காலமாக கஷ்டங்களை அனுபவித்து இருந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு நிச்சயமாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும். மனிதன் தனது வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறான். சாணக்கிய நீதியில் வாழ்க்கை சிறப்பாக அமைய இதுபோன்ற பல தந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். சாணக்கியர் தனது எண்ணங்களை சாணக்கிய நீதி மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். சாணக்கியரின் எண்ணங்கள் ஒரு நல்ல மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி நான்கு விஷயங்களில் மறைந்திருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றுபவர்களின் வீடு சொர்க்கமாக மாறும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திருப்தியுணர்வு
மனித வாழ்வில் திருப்தியுடன் வாழ்வதே மிகப்பெரிய வரம் என்று சாணக்கியர் கூறுகிறார். வெற்றி எப்போதும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது, அதே நேரத்தில் திருப்தி அவர்களின் சொந்த மனதின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. மனிதன் எல்லா நிலைகளிலும் திருப்தி அடைய வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையக்கூடியவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
நற்குணத்துடன் இருப்பது
இரக்கம் ஒரு மனிதரை நல்லவராக மாற்றுகிறது. கருணை உணர்வு ஒருவரை தீமை செய்வதிலிருந்து தடுக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பாவம் செய்வதில்லை. அதனால் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் குற்ற உணர்ச்சியை உணர மாட்டார்கள். சாணக்கியர், ஒருவரின் மனதில் எப்போதும் கருணை உணர்வு இருக்க வேண்டும் என்கிறார். எப்பொழுதும் பிறரிடம் அன்பாக நடந்து கொள்வதன் மூலம், வாழ்வில் மனஅமைதியைப் பெறலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
அமைதியான மனதுடன் இருப்பது
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு அமைதியே தீர்வு என்கிறார் சாணக்கியர். வாழ்க்கையில் அமைதியை விட பெரிய தவம் இல்லை என்று சாணக்கியர் கூறுகிறார். இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு மன அமைதி இருப்பதில்லை. அனைத்து வசதிகளும் இருந்தும், மனம் கலங்குபவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே ஒருவரின் மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியான மனம் இருந்தால், கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.
பேராசை இல்லாதவர்கள்
சாணக்கிய நீதி ஒருவர் வாழ்க்கையில் எதைச் சாதித்தாலும் அதில் திருப்தி அடைய வேண்டும் என்கிறார்., மேலும் எப்போதும் பேராசை கொள்ளக்கூடாது என்று கூறுகிறார். பேராசை பெரும்பாலும் வாழ்க்கையை அழிக்கிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, பேராசை ஒரு வகையான நோய். பேராசை கொண்டவர் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது.
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற பேராசை ஒரு மனிதனை தவறான பாதைக்கு கூட்டிச் சென்று அவரது மகிழ்ச்சியையும் அமைதியையும் அழிக்கிறது. பேராசை மனிதனின் சிந்திக்கும் திறனை பலவீனப்படுத்துகிறது. இதை வெல்பவர்கள் சொர்க்கத்தை விட மேலான வாழ்வைப் பெறுவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
