Latest Updates
-
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...!
Chanakya Niti: சாணக்கியர் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றி ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தார். அவர் இயற்றிய அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இன்றும் புகழ்பெற்ற நூலாக உள்ளன. சாணக்கியரின் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும். சாணக்கிய நீதி என்பது பல்வேறு அனுபவங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பழமொழிகளின் தொகுப்பாகும். வாழ்க்கையில் வெற்றி பெற சில வழிகளை சாணக்கியர் கூறுகிறார்.

சாணக்கியரின் அறிவுரைகளைக் கடைபிடித்தால் உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்களை நிச்சயம் சமாளித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். சாணக்கியர், தனது நீதி சாஸ்திரத்தில், ஒருபோதும் அவமதிக்கப்படக் கூடாத சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர்களை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் பெரும் பாவத்தை ஏற்படுத்துவதுடன், உங்கள் வாழ்க்கையை துன்பத்தில் மூழ்கடிக்கும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
நெருப்பு
இந்து மதத்தில் பஞ்ச பூதங்களில் ஒருவரான அக்னி கடவுளாகக் கருதப்படுகிறார். எந்த ஒரு சுப காரியமும் நெருப்பில்லாமல் தொடங்கப்படுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நெருப்பை மிதிப்பது அல்லது நெருப்பில் எச்சில் உமிழ்வது பாவமாக கருதப்படுகிறது. இது கடவுளுக்கு அவமானமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தவறைச் செய்வதால், ஒருவன் பாவத்தை சுமக்க வேண்டியிருக்கும்.
குரு
குரு நம் வாழ்க்கையை வடிவமைப்புவர், அவர் நம் வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்துகிறார். ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர். அத்தகைய ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை மதித்து அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். குருவை மதிக்காதவர்கள் வாழ்வில் நல்ல எதிர்காலத்தை அடைய மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர்.
கன்னிப்பெண்
கன்னிப் பெண்கள் தெய்வமாகக் கருதப்படுகிறார்கள். நல்ல வாழ்க்கையை விரும்புபவர்கள் பெண்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இதைச் செய்பவர்கள் வாழக்கையில் பெரும் பாவத்தை செய்பவர்களாக கருதப்படுகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அனைத்துப் பெண்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார்.
முதியவர்கள்
முதியவர்கள் ஒரு வீட்டின் வேர் போன்றவர்கள். அவர்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பது வீட்டில் உள்ள பெரியவர்களின் கவனிப்பால்தான். உங்கள் வீட்டு பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்துபெரியவர்களையும் எப்போதும் மதிக்க வேண்டும். பெரியவர்களின் ஆசிர்வாதம் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் எந்த பெரிய பிரச்சனையையும் தவிர்க்கலாம்.
பசு மாடு
இந்து மதத்தில் பசுவை கோமாதவா என்பார்கள். முப்பத்து முக்கோடி கடவுள்களின் இருப்பிடமாக பசு கருதப்படுகிறது. பசுவை மிதிப்பது அல்லது அவமதிப்பது பாவமாக கருதப்படுகிறது. நீங்கள் பசுவை பத்திரமாக பாதுகாத்தால், அது உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.
குழந்தைகள்
குழந்தைகள் மிகவும் அப்பாவிகள். ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் உருவம் என்று அழைக்கப்படுகிறார். அவர்களின் மனம் கடவுளைப் போல அமைதியானது. அவர்கள் எதைச் சொன்னாலும் அல்லது செய்தாலும், அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தையைக் கடவுளாகக் கருதி அன்பு செலுத்த வேண்டும். குழந்தைகளை கடவுளாக மதிக்க வேண்டும் மற்றும் நேசிக்க வேண்டும், அவர்களை ஒருபோதும் ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது.



Click it and Unblock the Notifications
