Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருப்பவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும், ஆனால் சில நேரங்களில் அவர்கள் செய்யும் சில தவறுகளால், பலர் வெற்றியை அடையத் தவறிவிடுகிறார்கள். வாழ்க்கையில் தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால், சாணக்கிய நீதியில் உள்ள சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சாணக்கியரின் நீதிநூல் மனித வாழ்க்கை மற்றும் அதன் தீர்வு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பிடுகிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற பல அடிப்படை மந்திரங்களை சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. சாணக்கியர் கூறும் வெற்றிக்கான மந்திரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடின உழைப்பு
உங்கள் இலக்குக்காக நீங்கள் கடினமாக உழைத்தால், உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று சாணக்யா கூறுகிறார். ஆச்சார்யா சாணக்யா, கடினமான உழைப்பின் மூலம் சாத்தியமில்லாத பணிகளைக் கூட சாத்தியமாக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே ஒரு நபர் எப்போதும் தனது இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
ஞானம்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஒரு நபர் எங்கும் அறிவைப் பெற வெட்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார். அறிவு படைத்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அறிவு ஒருபோதும் குறையாது, எனவே அறிவே ஒருவரின் மிகப்பெரிய செல்வம். எனவே முடிந்தவரை அறிவைப் பெற முயற்சி செய்யுங்கள்.
கவனம்
ஒருவர் அனைத்து சூழ்நிலைகளைப் பற்றியும் கவனமாக அறிந்திருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார். இதன் மூலம் தனது தவறுகளையும் குறைகளையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஒருவர் தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டால், அவர் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
தன்னம்பிக்கை
ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருந்தால் அவனை தோற்கடிக்க முடியாது என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறியுள்ளார். எதையும் செய்யும் துணிச்சல் கொண்ட ஒருவர் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் தன்னம்பிக்கையே ஒரு மனிதனை எப்போதும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இது தவிர, தன்னம்பிக்கை ஒரு நபரை தனது இலக்கை நோக்கி கடினமாக உழைக்க தூண்டுகிறது.
அமைதி
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து தன் புரிதலுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்தால் அந்த முடிவு தவறாகாது.
நேர மேலாண்மை
சாணக்கியரின் கூற்றுப்படி நேரம் மிகவும் மதிப்புமிக்கது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் மிகவும் முக்கியமானது. எனவே நேரத்தை எதற்காகவும் வீணாக்காதீர்கள். ஒவ்வொரு கணமும் ஒரு நபருக்கு எதையாவது கற்றுக்கொடுக்கிறது. எனவே நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் நேரத்தை மதிக்க வேண்டும். அது எப்போதும் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
சேமிப்பு
சாணக்கிய நீதியின் படி எந்த விஷயத்திற்காகவும் யோசிக்காமல் பணத்தைச் செலவு செய்யக்கூடாது. உங்கள் மோசமான நேரத்தில் உங்களுக்கு உதவுவது உங்களிடம் உள்ள பணம் மட்டுமே. நெருக்கடியான நேரத்தில் எல்லோரும் உங்களைக் கைவிட்டுவிடும்போது பணம் உண்மையான நண்பராக நின்று உங்களைக் காப்பாற்றும்.



Click it and Unblock the Notifications
