Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 5 குணமுள்ள பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
Chanakya Niti: ஒரு ஆணுக்கு கடவுள் கொடுக்கும் மிகச்சிறந்த பரிசு புரிதலுள்ள மனைவி. ஏனெனில் வாழ்க்கையில் வெற்றிபெறும் அனைத்து ஆண்களுக்கும் பின்னால் எப்போதும் ஒரு பெண் இருப்பார் என்பது பழமொழி. அதேபோல ஒரு பெண்ணால் எவ்வளவு வலிமையான ஆணையும் வீழ்த்தி விட முடியும். இந்தியாவின் தலைசிறந்த ராஜதந்திரியான சாணக்கியரும் இதைத்தான் கூறியுள்ளார்.
ஒருவர் தனது வாழ்க்கையில் பெரிய உயரங்களுக்குச் சென்றால், அவரது மனைவி அவருக்குப் பின்னால் இருப்பார் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தால், அந்த வீடு நரகமாக மாறும் மற்றும் அவரின் கணவர் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. சாணக்கிய நீதி படி மோசமான மனைவியை அடையாளம் காண்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண் தன் கணவருக்கோ அல்லது குடும்பத்திற்கோ எந்த முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்வது நல்லதல்ல. ஏனென்றால் அவர்கள் பொருள் சார்ந்த உலகில் வாழ்கிறார்கள். அத்தகைய பெண்கள் எப்போதும் ஆடம்பரமான வாழ்வை வாழ விரும்புகிறார்கள். அது நிறைவேறாத போது அவர்கள் மூர்க்கமானவர்களாக மாறுகிறார்கள்.
மற்றவர்களை அவமதிக்கும் பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் மற்றவர்களை அவமதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அத்தகைய பெண் ஒருபோதும் குடும்பத்தை நன்றாக வழிநடத்த முடியாது. அத்தகைய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். விருந்தினரை வரவேற்காத, பெரியவர்களை மதிக்காத பெண்ணை திருமணம் செய்து கொள்வது உங்களை குடும்பம் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரித்து வைக்கும். அத்தகைய பெண் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் சொல்ல தயங்காத பெண்
ஒருவரின் நிம்மதியான வாழ்க்கை என்பது அவர்கள் பொய் கூறாமல் இருக்கும் வரைதான். எப்பொழுதும் பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ள பெண்கள் தங்கள் கணவருக்கு துன்பம் தருவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் எப்போதும் கணவனைத் தூண்டிவிட முயற்சிப்பதாகவும், குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் சாணக்கியர் கூறுகிறார்.
ஏமாற்றும் குணமுள்ள பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி, மக்களை ஏமாற்றும் அல்லது ஒருவரை தங்கள் சொந்த லாபத்திற்காக பயன்படுத்தும் பெண்கள் ஒருபோதும் குடும்பத்தில் அமைதியையம், மகிழ்ச்சியையும் உருவாக்க மாட்டார்கள். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர். அத்தகைய பெண்களை திருமணம் செய்து கொள்வது மட்டுமல்ல அவர்களிடம் பழகாமல் இருப்பதே நல்லது.
படிப்பறிவு இல்லாத பெண்
கல்வியறிவு இல்லாத பெண், தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்து, தன் குழந்தைகளுக்கு நல்ல குணங்களையும், பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டை பொருளாதாரரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறார்கள். மேலும், இதுபோன்ற பெண்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் முட்டாளாக வளர்ப்பார்கள். குடும்பத்தின் நிலை என்னவாக இருந்தாலும், பெண்கள் தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்வதும், குழந்தைகளைக் கவனிக்காமல் இருப்பதும் குடும்பச் சிதைவுக்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.



Click it and Unblock the Notifications
