Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
சாணக்கிய நீதி படி ஆண்களிடம் நாயின் இந்த 5 குணங்கள் இருக்க வேண்டுமென்று பெண்கள் ஆசைப்படுவார்களாம்
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சாணக்கியர் இந்தியாவின் முதல் மாபெரும் பொருளாதார அறிஞராகவும் தத்துவஞானியாகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். பொருளாதாரம், அரசியல் மற்றும் ராஜதந்திரம் ஆகிய துறைகளைத் தாண்டி, சமூகத்திற்கு எக்காலமும் பொருந்தக்கூடிய எண்ணற்ற நடைமுறைப் பாடங்களை ஆச்சார்ய சாணக்கியர் போதித்துள்ளார். அவரது சிந்தனைகளும், அறிவுரைகளும் இன்றைய சமூகத்திற்கும் பயனுள்ளவையாகத் திகழ்கின்றன.

சாணக்கியரின் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதி பெண்கள், ஆண்கள், பெரியவர்கள், முதியோர், குழந்தைகள் எனச் சமூகத்தின் அனைத்து பிரிவினரைப் பற்றியும் விரிவாக விவாதித்துள்ளது. சாணக்கியரின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனது வாழ்க்கையைச் சிறப்பித்துக்கொள்ள முடியும்.
சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் நமக்கு வாழ்க்கையைப் பற்றிப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. அவற்றில் ஒன்று, ஆண்-பெண் உறவு பற்றியது. இது தொடர்பாகப் பல முக்கியமான கருத்துகளைச் சாணக்கியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கும்போது, ஆண்கள் சில விலங்குகளுக்குரிய இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவதாகச் சாணக்கியர் கூறியுள்ளார். அந்த விலங்கு வேறு ஒன்றுமல்ல நாய்தான். நாயிடம் இருக்கும் சில குணங்கள் ஆண்களிடம் இருந்தால் அந்த ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள். அது எந்தெந்த குணங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மனநிறைவுடன் இருக்க வேண்டும்
சாணக்கியரின் நீதியில் கூறியுள்ள படி, ஒரு ஆண் தன்னால் இயன்றவரை கடுமையாக உழைக்க வேண்டும். அதே வேளையில், தனக்குக் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டோ அல்லது உழைப்பின் பயனாகக் கிடைக்கும் பலனைக் கொண்டோ அவர் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். தனக்கு அளிக்கப்படும் உணவின் அளவைக் கொண்டு ஒரு நாய் எவ்வாறு மனநிறைவு கொள்கிறதோ, அதேபோன்றுதான் இதுவும் இருக்க வேண்டும். அதேபோல, ஒரு மனிதன் தனது கடும் உழைப்பின் மூலம் ஈட்டிய செல்வத்தைத் தனது குடும்பத்தைப் பராமரிக்கப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய பண்பைக் கொண்ட ஆண்கள், சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்வில் பெரிய சாதனையாளர்களா திகழ்வார்கள்.
தூங்கும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நாய் எப்படி உறங்கிக்கொண்டிருக்கும் போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்கிறதோ, அதேபோல ஆண்களும் தங்கள் கடமை விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கள் குடும்பத்தினரின் நலனுக்காகவும், தங்களின் சொந்தப் பாதுகாப்பிற்காகவும், ஆண்கள் தங்களுக்கு வரக்கூடிய எதிரிகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், மிகச்சிறிய சத்தம் கேட்டவுடனேயே விழித்தெழும் திறனை அவர் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய பண்பு கொண்ட ஒருவனிடம், அவரது மனைவி எப்போதும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வார்.
மனைவி மீது எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நாயின் விசுவாசம் என்பது எல்லையில்லாதது. அதே போல, ஒரு ஆணும் தன் மனைவிக்கும், தனது வேலைக்கும் மிகுந்த விசுவாசத்துடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத பெண்களைக் கண்டு பேராசை கொள்ளும் ஒரு ஆணின் வீட்டில் எப்போதும் அமைதியின்மை நிலவும். அத்தகைய ஆணிடம் அவரது மனைவி ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை; ஏனெனில், மனைவி தன் கணவனின் விசுவாசத்தையே பெரிதும் போற்றி மதிப்பார்கள்.
தைரியத்துடன் இருக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நாய் துணிச்சலும் அச்சமின்மையும் கொண்டது. தன் எஜமானரைப் பாதுகாக்க அது தன் உயிரையேகொடுத்துப் போராடும். அதேபோலவே, ஆண்களும் துணிச்சலுடன், தேவைப்படும்போது தங்கள் மனைவியையும் குடும்பத்தையும் காக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைக்க அஞ்சக்கூடாது.
மனைவியின் உடல் மற்றும் மன நலத்தைப் பாதுகாக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆணின் முதல் கடமையும் பொறுப்பும், தன் மனைவியை அனைத்து வகையிலும் திருப்திப்படுத்துவதே ஆகும். தங்கள் மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்வுடன் வைத்திருக்கும் ஆண்கள், எப்போதும் ஒரு மகிழ்ச்சியான மனைவியைப் பெற்றிருப்பார்கள். மேலும், இவ்வாறு நடந்துகொள்ளும் ஒரு ஆண், தன் மனைவியால் எப்போதும் பெரிதும் நேசிக்கப்படுவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
