Latest Updates
-
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி நீங்க கோடிகளை சம்பாதிக்கணும்னா சாணக்கியர் சொல்லும் இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவை ஆண்ட முக்கிய வம்சங்களில் ஒன்றான மௌரிய வம்சத்தின் அரசியல் குருவாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் சிறந்த இராஜதந்திரி என புகழ்பெற்ற நபர். வாழ்க்கை, வணிகம், சமூக வாழ்க்கை, ஒழுக்கம், பொருளாதாரம் போன்ற பல விஷயங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் மாற்றலாம்.
வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை அனுபவிக்க விரும்பாதவர்கள், நிதி ஸ்திரத்தன்மையை அடைய சாணக்கியரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். சாணக்கியரின் அறிவுரைகள் ஒரு நபர் வாழ்க்கையில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளித்து வெற்றிப் பாதையில் முன்னேற உதவும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தகுதியில்லாதவர்களுக்கு கடன் கொடுக்கக்கூடாது
நீங்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் சூழல் ஏற்பட்டால் உங்கள் பணத்தை தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். தகுதியற்ற எவருக்கும் ஒருபோதும் பணம் கொடுக்கக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் யாருக்குப் பணம் கொடுத்தாலும், அது நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் நிதிநிலை என்பது உங்கள் பணத்தை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
மூன்று கேள்விகள்
ஒரு வேலையைத் தொடங்குவதற்கு முன், உங்களுக்குள் நீங்களே மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும. இதை ஏன் செய்கிறார்கள், இதனால் என்ன பலன்கள் கிடைக்கும், யார் இதில் வெற்றி பெறுவார்கள். இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் ஆழமாக சிந்தித்து திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்த வேலையைத் தொடரவும். இலக்கு இல்லாமல் செய்யப்படும் வேலைகளில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
தோல்வி பயம் கூடாது
ஒரு வேலையை ஆரம்பித்துவிட்டால், அதை ஒருபோதும் பாதியில் நிறுத்தக்கூடாது. தோல்வி பயம் உங்களை ஒருபோதும் ஆட்கொள்ள விடாதீர்கள், தொடர்ந்து கடினமாக உழைக்கவும். பயமின்றி தொடர்ந்து உழைப்பவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பயமின்றி நேர்மையாக உழைப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும்
பணம் எப்போதும் சரியான வழியில் மட்டுமே சம்பாதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தவறான வழியில் சம்பாதித்த பணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். நேர்மையற்ற வழிகளில் சம்பாதிக்கும் பணம் வாழ்க்கையில் நிச்சயம் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். சாணக்கியரின் கூற்றுப்படி, நெறிமுறையற்ற வழிகளில் சம்பாதித்த பணம் உங்கள் கைகளில் இருந்து விரைவில் காணாமல் போய்விடும்.
அத்தகைய பணத்தின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் மட்டுமே. இந்த 10 வருடங்களில் பணம் உங்கள் கைகளில் இருந்து தண்ணீர் போல வெளியேறும். எனவே, கடின உழைப்பு மற்றும் நேர்மை மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படிப்பட்ட பணம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.
நஷ்டத்தைப் யாரிடமும் சொல்லாதீர்கள்.
உங்களின் செல்வம் மற்றும் கடன் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். ஏதேனும் பரிவர்த்தனை காரணமாக உங்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அதைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், இந்த விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருங்கள்.



Click it and Unblock the Notifications
