Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்களில் ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்களை யாராலும் காப்பாத்த முடியாதாம்!
இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரான சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையில் வெற்றிக்கான பல ரகசியங்களைக் கூறியுள்ளார். இவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு நபர் தனது இலக்கை அடைகிறார். அந்த வெற்றிக்கான ரகசியங்களில் யாருடன் பழக வேண்டும் என்பதும் அடங்கும்
சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்க்கையில் சிலரிடமிருந்து ஒரு நபர் எப்போதும் தூரத்தை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் ஒரு நபர் வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த வகை நபர்களிடமிருந்து ஒருவர் விலகியிருப்பதுடன் அவர்களிடம் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கொடுத்த வாக்கை மீறுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, சிலர் உங்கள் முன்னால் பெரிய விஷயங்களைப் பேசுகிறார்கள். மேலும், உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று வாக்குக் கொடுப்பார்கள். ஆனால் இந்த நபர்கள் உங்களுக்கு தேவைப்படும் போது ஓடி ஒளிந்து கொள்வாவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது, அவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்கக்கூடாது. அவர்களை நம்புவது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
அனைத்திற்கும் பாராட்டுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் முகத்திற்கு முன் எப்போதும் புகழ்பவர்களை நம்பக்கூடாது. சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, அப்படிப்பட்டவர்கள் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள இதனை செய்கிறார்கள். இதுபோன்ற தவறான புகழ்ச்சிகளை வழங்குபவர்களிடமிருந்து நீங்கள் தூரமாக இருக்க வேண்டும். உங்களைப் பயன்படுத்திக் கொள்ளவே இப்படிச் செய்கிறார்கள், மேலும் உங்களால் காரியம் நடக்கவில்லையெனில் தூற்றவும் செய்வார்கள்.
எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரைப் பற்றி மற்றொரு நபரிடம் சொல்லும் பழக்கம் சிலருக்கு உள்ளது. அப்படிப்பட்டவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அவர்கள் உங்கள் ரகசியங்களை ரகசியங்களாகவே வைத்திருக்க முடியாது. நீங்கள் ஒருவரைப் பற்றி அவர்களிடம் பேசினால், அவர்கள் அதனை மற்றவர்களிடம் கூறுவார்கள், இதன் காரணமாக, உங்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் இதனால் நீங்கள் சமூகரீதியாக அவமானப்பட வேண்டியிருக்கும். எனவே, அத்தகையவர்களிடமிருந்து தூரமாக இருக்க வேண்டும்.
பொய்யர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பொய் சொல்பவர்களை நம்பக்கூடாது. இப்படிப்பட்டவர்களுடன் வாழ்வது வாழ்க்கைக்கு நல்லதல்ல, மேலும் அத்தகையவர்களை உங்களை பெரிய சிக்கலில் தள்ளலாம். இவர்களால் எதிர்காலத்தில் நீங்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் இவர்கள் எந்த காரணமும் இல்லாமல் பொய் சொல்வதால், சில சமயங்களில், அவர்கள் உண்மையே பேசினாலும் உங்களால அதனை நம்ப முடியாது.



Click it and Unblock the Notifications

