Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இந்த விஷயங்களை வெளியே சொன்னால் அவங்க வாழ்க்கையே வீணாகிடுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவரது திறமையான இராஜதந்திரத்தின் அடிப்படையில், அவர் சந்திரகுப்த மௌரியரை மகதப் பேரரசின் பேரரசர் ஆக்கினார். சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் அவர் தனது அனுபவங்களையும், அறிவுரைகளையும் தொகுத்துள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன, இன்றும் அவை உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. அவருடைய கொள்கைகள் இன்றும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சாணக்கியர் மக்கள் சில விஷயங்களை தங்களுக்குள் எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். குறிப்பாக ஆண்களும் பெண்களும் சில விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆண்களும் பெண்களும் யாரிடமும் சொல்லக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. உங்கள் தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். சாணக்கியரின் கூற்றுப்படி நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குடும்ப ரகசியங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைகளை மறைக்க வேண்டும். வீட்டில் ஏதாவது சண்டை என்றால் அவர்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஆணோ பெண்ணோ தங்கள் குணம் அல்லது வீட்டு விவகாரங்களைப் பற்றி வெளியாட்களிடம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். காலப்போக்கில், உங்கள் ரகசியங்கள் மற்றவர்களால் பகிரப்பட்டு உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.
பணக்கஷ்டம்
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களுக்கு ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டால், அதை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது. ஏனென்றால் உங்கள் இழப்பில் மற்றவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினாலும், அவர்கள் உண்மையில் உள்ளுக்குள் சந்தோஷப்படுவார்கள்.
மேலும் அவர்கள் உங்களை மற்றவர்களிடம் விமர்சிப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் மரியாதையை நிலைநிறுத்த பண இழப்பு பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களை விலக்கி வைக்கலாம்.
அவமரியாதை
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, யாராவது உங்களை அவமதித்திருந்தால் அல்லது தீங்கு செய்திருந்தால், அதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. ஏனென்றால் நீங்கள் இதைச் சொன்னால், மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். எனவே கணவனோ, மனைவியோ யாராக இருந்தாலும் தங்கள் அவமானத்தை பிறரிடம் சொல்லக்கூடாது.
உடல்நல பிரச்சினைகள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்களை மறைக்க முனைகிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றால், கணவன் அல்லது குடும்பத்தினர் முன்னிலையில் அதை சொல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
மனஅழுத்தம்
உங்கள் சோகங்களையும், வலிகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் குறையும் என்பார்கள். ஆனால் உண்மையில் உங்கள் துக்கங்களையும் வலிகளையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் பெரும்பாலும் அவர்கள் உங்களை முன் ஆறுதலாக பேசுவார்கள், உங்கள் முதுகுக்குப் பின்னால் கிண்டல் செய்வார்கள்.
இல்லற பிரச்சினைகள்
உங்கள் திருமண வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், அதை நீங்களே தீர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். திருமண பிரச்சனைகளை மூன்றாவது நபருடன் பகிர்ந்து கொள்வது ஏற்புடையதல்ல.
மற்றவர்கள் உங்கள் வாதங்களை வேறு கோணத்தில் புரிந்து கொண்டு உங்களை கேலி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உறவு மேலும் மோசமடையக்கூடும்.



Click it and Unblock the Notifications
