Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 பழக்கங்கள் உள்ளவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவே முடியாதாம்... உடனே மாத்திக்கோங்க!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு பிரபலமான தத்துவஞானி. சாணக்கியரின் கொள்கைகள், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல மக்களைத் தூண்டுவதாக இருந்தது. அவர் இராஜதந்திரம் மற்றும் அரசியலில் நிபுணராகக் கருதப்படுகிறார். அவர் தரும் ஆலோசனைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளலாம். சாணக்கியர் தனது கொள்கைகளில் ஒரு நபரின் வாழ்க்கையை அழிக்கும் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐந்து பழக்கவழக்கங்களால் ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் இந்த பழக்கங்களை விட்டுவிட்டால் அல்லது மாற்றினால், அவர் வாழ்க்கையில் பெரிய இழப்புகளைச் சந்திக்க மாட்டார். அந்த பழக்கங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகமான செலவு
ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார், ஒருவர் தேவைக்கு அதிகமாக பணம் செலவழிக்கக்கூடாது. அதிகமாக செலவு செய்பவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கத்தால் ஒருவருக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு ஏற்படும். அதன் காரணமாக வேறு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணம் இல்லாததால் எப்போதும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும்.
பலவீனத்தை வெளியே சொல்லக்கூடாது
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். கவலையில் இருக்கும் ஒரு நபர் தனது பலவீனத்தை தனது நண்பர் அல்லது சக ஊழியரிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் மற்றவர்கள் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் எதிர்காலத்தில் அவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது
சாணக்க்கியரின் கூற்றுப்படி, பாகுபாடு பார்ப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பவர் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. எப்பொழுதும் அதிகமாக ஆசைப்பட்டு தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறான்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி என்று சாணக்கியர் கூறுகிறார். சோம்பேறிக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். அத்தகைய நபர் எப்போதும் தனது வேலையை நாளை வரை ஒத்திவைப்பார். அதனால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால் எப்போதும் வெற்றி அவரை விட்டு தள்ளிச்சென்று கொண்டே இருக்கும்.
அவசரமாக முடிவெடுத்தல்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பாதகமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். அவசரமாக அல்லது மனக்கிளர்ச்சியுடன் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.



Click it and Unblock the Notifications
