Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த பெண்களின் இந்த 4 தீய பழக்கங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுத்துவிடுமாம்...ஜாக்கிரதை!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். அவர் தன்னுடைய அனுபவங்களை சாணக்கிய நீதியில் தொகுத்துள்ளார். இதில் பணம், உடல்நலம், வியாபாரம், திருமண வாழ்க்கை, சமூகம், வாழ்வில் வெற்றி என அனைத்திலும் தனது கருத்தைத் தெரிவிக்கிறார். இதனுடன், சாணக்கியர் சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார்.
தங்களின் சில பழக்கவழக்கங்களால் பெண்கள் எப்போதும் குடும்பத்திற்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு பெண் தன் சில கெட்ட குணங்களால் குடும்பம் முழுவதையும் கஷ்டப்படுத்துவார்.

இந்தப் பழக்கங்கள் அதிகரித்தால் குடும்ப வாழ்க்கை நரகமாகிவிடும். சாணக்கியரின் கூற்றுப்படி பெண்களின் எந்தெந்த பழக்கங்கள் குடும்பத்தைக் கெடுக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கிய பிரச்சினைகளை மறைப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்களை மற்றவர்களிடமிருந்து மறைக்கிறார்கள். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும், கணவரிடம் அல்லது குடும்பத்தினர் இதைப் பற்றிக் கூறுவதில்லை. இதனால் அவர்கள் தானாகவே மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
முறையான சிகிச்சையின்றி நீண்டகாலமாக மூடிமறைக்கப்பட்ட நோய்கள் மோசமடையத் தொடங்குகின்றன. இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் தங்கள் நோயைப் பற்றி ஒருபோதும் மறைக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் சொல்லும் பழக்கம்
பெண்கள் பல விஷயங்களில் பொய் சொல்வதாகவும், இந்தப் பழக்கத்தால் பலமுறை பிரச்சனைகளில் சிக்குவதாகவும் சாணக்கியர் கூறுகிறார். ஆண்களுக்கும் பொய் சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் பொய் சொல்ல ஆரம்பித்தால் அவர்களுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் சாணக்கியன் கூறுகிறார்.
ஒரு பொய் சிறிது காலத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் ஆனால் உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது. உண்மை வெளிவந்தால் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சியும் மறைந்துவிடும். பெண்களுடன் ஆண்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த விஷயத்தையும் மறுக்காமல் ஒப்புக்கொள்வது
பெரும்பாலும் பெண்கள் தங்கள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள். யாரும் வருத்தப்படக்கூடாது என்பதற்காக இதைச் செய்கிறார்கள்.
ஆனால் இந்த தவறு அவர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களும் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி, தங்கள் சுயமரியாதையை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
கருத்துக்களை மறைப்பது
மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் பெண்கள் குடும்பம் அல்லது கணவர் முன் தங்கள் கருத்தை தெரிவிக்க மறுக்கிறார்கள்.
அவர்கள் குடும்ப சண்டைகளைத் தவிர்க்க விரும்புகிறார்கள். ஆனால் அதன் பிறகு அடிக்கடி வருந்துவார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
நல்ல மனைவிக்கான தகுதிகள்
- மென்மையாக பேசுபவர்கள்
- பணத்தை சேமிப்பவர்கள்
- நல்ல குணம் கொண்டவர்
- கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்
- உறவுகளை சீர்படுத்துபவர்கள்
- அமைதியாக பேசுபவர்



Click it and Unblock the Notifications

