Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் தெரிந்தவர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளை கூட வீழ்த்தி விடுவார்களாம்...!
Chanakya Niti: ஒருவர் வாழ்க்கையில் முன்னேற நண்பர்கள் எவ்வளவு அவசியமோ அதேயளவிற்கு எதிரிகளும் அவசியம். ஏனெனில் நம்முடைய எதிரிகளே நம்முடைய வெற்றிக்கான காரணமாக இருப்பார்கள். வாழ்க்கையில் எதிரிகளை எதிர்கொள்வது எளிதான காரியமல்ல. பெரும்பாலும் நம் எதிரிகளை நாம் அடையாளம் காண முடியாமல் போகலாம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரி கூட நமக்கு தோல்விகளையும் துரதிர்ஷ்டங்களையும் கொண்டு வர முடியும்.
நமக்குத் தெரியாமலேயே சிலர் நமக்கு எதிராக செயல்படுகிறார்கள். நம்மை எதிர்த்து நிற்காமல், சிரித்துக்கொண்டே, நமக்கு ஆதரவாக இருப்பது போல் நடிப்பார்கள், அவர்கள் நம் அழிவை விரும்பும் எதிரியை விட அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். நாம் அத்தகையவர்களைக் கண்டுபிடித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். எதிரிகளை வெல்ல சாணக்கியர் கூறும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எதிரிகளின் மனதை அடக்கி ஆள வேண்டும்
அருகில் ஒளிந்திருக்கும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய முதல் உத்தி, அவர்களின் மனதை கட்டப்படுத்துவதாகும். எதிரியை பலத்தால் அடக்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். நாம் அவர்களின் மனதில் இடம் பெற வேண்டும். நீங்கள் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும், உங்கள் எதிரியின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் மனதில் ஊடுருவ வேண்டும்.
எதிரியின் மனதைப் புரிந்துகொள்பவர்கள் தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண முடியும். வெற்றிக்கான பாதை அங்கே திறக்கப்படும். இந்த யுக்தி மூலம் ஒரு எதிரியை மிக எளிமையாகநண்பனாக மாற்ற முடியும்.
வாக்கு வாதத்தை விளக்கி வைக்கவும்
உங்கள் எதிராளியுடன் ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. வாக்குவாதம் செய்வதற்கு முன் சில விஷயங்களை நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஏன் வாதிடுகிறீர்கள், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதைப் பற்றி ஆழமாக சிந்தியுங்கள். ஒவ்வொரு வாக்குவாதமும் ஒரு பெரிய சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.
ஒரு தகராறு ஏற்படும் போது, அதற்கு பதிலளிப்பதற்கு முன்பு மிகவும் அமைதியாக சிந்தியுங்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை மறந்து விடுங்கள். நாம் கோபத்தையும் பிற உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளும்போது, மிகப்பெரிய எதிரி கூட நமக்கு முன்பாக பின்வாங்கிவிடுவார்கள்.
பொறுமையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்
உங்கள் எதிரியாக இருந்தாலும் கூட, அவர்களிடம் விஷயங்களை மிகவும் தெளிவாகவும், பொறுமையாகவும் பேசுவதே அவர்களை வெல்ல சிறந்த வழியாகும். வாழ்க்கைப் போரில் வார்த்தைகள்தான் ஆயுதம். ஒருவரை உங்கள் எதிரி என்று நினைத்து அவமதிப்பதையோ அல்லது குற்றம் சாட்டுவதையோ செய்யாதீர்கள். அது அவர்களுக்குள் விரோதத்தையே வளர்க்கும். அதற்கு பதிலாக, அவர்களிடம் அனுதாபத்துடன் பேச முயற்சி செய்யுங்கள். பரஸ்பர புரிதலை உருவாக்க முன்முயற்சி எடுங்கள். இந்த அணுகுமுறை எதிரியைப் பலவீனப்படுத்தும். அவர்கள் நம் முன் சரணடைவார்கள்.
எதிரியின் உத்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்
எதிரிகளை வெல்ல உதவும் மற்றொரு முக்கியமான உத்தி என்னவென்றால், எதிரியைக் கண்டுபிடித்தவுடன், அவர்களின் உத்திகளைப் பின்பற்றுவது. எதிரிகளின் குறிக்கோள் நம்மை வெல்வதுதான். அந்த இலக்கை அடைய எதிரி எந்த வழிமுறைகளைப் பின்பற்றுவார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உத்திகள் பற்றி நமக்கு தெளிவான நம்பிக்கை இருந்தால், அவர்களின் அடுத்த நகர்வுகளை நாம் எளிதில் கணிக்கலாம்.
செய்யக்கூடியதை மட்டும் சொல்லுங்கள்
கோபத்திலோ அல்லது விரக்தியிலோ எதையும் சொல்லாதீர்கள். உங்களால் நிச்சயமாகச் செய்யக்கூடிய விஷயங்களை மட்டும் சொல்லுங்கள், செய்ய வேண்டியதை மட்டும் சொல்லுங்கள். வார்த்தைகளை விட செயல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் மற்றும் ரகசியங்களை நீங்கள் நம்புபவர்களிடம் மட்டுமே வெளிப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
