Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
சாணக்கிய நீதி படி திருமணத்துக்கு பின் பெண்களிடம் வரும் இந்த 5 மாற்றங்கள் ஆண்களின் வாழ்க்கையை நரகமாக்குமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞராவார். நிதி அல்லது தனிப்பட்ட எந்த பிரச்சனையையும் எளிதில் தீர்க்கும் அறிவாளியாக அவர் விளங்கினார். மனித வாழ்க்கையைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் சாணக்கியரின் வார்த்தைகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பலரால் பின்பற்றப்படுகின்றன. சாணக்கியர் தனது எண்ணங்கள் மற்றும் பார்வைகள் அனைத்தையும் சாணக்கிய நீதியில் விவரித்துள்ளார்.

ஆணும் பெண்ணும் சமமாக பங்கேற்பதே மகிழ்ச்சியான திருமணத்தின் அடிப்படை என்கிறார் சாணக்கியர். திருமண வாழ்க்கைக்கு நிலைத்தன்மையும் விசுவாசமும் அவசியம். ஏனெனில் இந்தக் காரணிகள்தான் திருமண உறவைப் பாதுகாக்கின்றன.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான திருமணம் குறித்து சாணக்கியர் பல விதிகளை வகுத்துள்ளார். சாணக்கிய நீதியின்படி, திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் காலப்போக்கில் மனைவியிடம் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளின் தொடக்கமாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேராசை
திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் சேர்ந்து வீட்டை ஆளுகிறார்கள். ஆனால், பெண் பேராசை கொண்டவராகவும், அதிகம் செலவழிப்பவராகவும் இருந்தால்,அந்த வீடு ஒருபோதும் செழிக்காது என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட பெண் தன் நலனை மட்டுமே நினைத்து கணவனை பணத்திற்காக துன்புறுத்துவார். பேராசையால் தவறான செயல்களையும் செய்கிறார்கள்செய்யத் துணிகிறார்.
முட்டாள்தனம்
கணவன் புத்திசாலியாகவும், மனைவி முட்டாள்தனமாகவும் இருந்தால், அவர் சிந்திக்காமல் செயல்படுவார் என்று சாணக்கியர் விளக்குகிறார். முட்டாள்கள், புத்திசாலிகளுடன் வாதிடுகிறார்கள். அறிவார்ந்த விஷயங்களைக் கேட்பது அவர்களுக்குப் பிடிக்காது. இப்படிப்பட்ட முட்டாள் மனைவிகளுக்கு கணவன் எதிரி போல காட்சியளிப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய்
சாணக்கியரின் கூற்றுப்படி, பொய் சொல்லும் பழக்கம் ஆண், பெண் இருவரிடமும் இருக்கும். ஆனால் பெண்களுக்கு பொய் சொல்லும் பழக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சில பெண்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி கிசுகிசுப்பதையும், சிறிய விஷயங்களை பெரிய பிரச்சினையாக மாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அத்தகைய பெண்களை யாரும் நம்ப மாட்டார்கள். இந்த பெண்கள் ஒருபோதும் மற்றவர்களிடமிருந்து மரியாதை பெற மாட்டார்கள். இப்படிப்பட்ட பழக்கங்களைக் கொண்ட மனைவிகள் கணவரின் வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள்.
புதிய ஆணுடன் நட்பு
கணவனைத் தவிர வேறு ஒருவருடன் உறவு கொள்ளும் பெண், தனது கணவரை தன்னுடைய மிகப்பெரிய எதிரியாக கருதுவார் என்று சாணக்கியர் கூறுகிறார். கெட்ட குணம் கொண்ட இத்தகைய பெண்கள் கட்டுப்பாட்டை விரும்புவதில்லை, கணவனை எதிரியாகக் கருதுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையை நரகமாக்குவது உறுதி.
பெரியவர்களை அவமதிப்பது
பெரியவர்களை மதிக்காத பெண்கள் வீட்டிற்கு சாபக்கேடு. அத்தகைய பெண்கள் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள், அனைத்திற்கும் சண்டையிடுவார்கள். அவர்கள் வீட்டின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அத்தகைய மனைவியைக் கொண்ட எந்த ஆணும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண முடியாது.



Click it and Unblock the Notifications

