Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
உங்க ஜாதகத்தில் ஏழரை சனி இருக்கா? அப்போ எப்போது திருமணம் செய்யலாம்?
ஏழரைச் சனி காலம் என்பது மக்களுக்குப் பல அனுபவங்களைக் கற்றுத் தரும் காலம். சனி பகவான் ஒருவருக்கு ஏழரை வருடங்கள் பல கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கையின் பாடத்தை புரிய வைப்பார் என்பதே இதன் உண்மையான விளக்கமாகும். பலருக்கு திருமணம் என்றால் ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம்.
அதனால், திருமணம் எப்போது செய்ய வேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று ஜொதிடம் பார்ப்பதுண்டு.. அதிலும் ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா? அப்படி செய்தால் என்ன நடக்கும் என்று நாம் இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

நவகிரகங்களின் கர்ம காரகன், ஆயுள் காரகன் என அழைக்கப்படும் சனி பகவான். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்வார். இவர் ஒரு ராசிக்கு பெயர்ச்சி ஆனதும், அவர் பெயர்ச்சி செய்துள்ள ராசிக்கு முன் மற்றும் பின் ராசிகளுக்கு ஏழரை சனி காலம் ஆரம்பித்து விடும்
ஏழரை சனி என்றால் என்ன?
நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரை சனி என்கிறோம்.
ஏழரை சனி எப்போது வரும்?
ஏழரைச் சனி என்பது, ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் ஆகும். ஜென்ம ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் 'விரயச் சனி' என்றும், ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலம் ஜென்ம சனி என்றும், ராசிக்கு 2ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தை பாத சனி அல்லது குடும்ப சனி என்றும் அழைக்கப்படுவார்.
ஏழரைச் சனி என்ன செய்ய வைக்கும்?
ஏழரைச் சனி காலத்தில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது விருப்பமில்லை என்பதை கண்டுகொள்ளாமல் உங்கள் கடமைகளை செய்ய வைக்கும். எனக்கு இது பிடிக்கவில்லை என்று உங்கள் கடமையில் இருந்து தவற முடியாது. கடின உழைப்பை மேற்கொள்ள வைக்கும். நேர்மையாக இருக்க வைக்கும். நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையாகவும், கடினமாக உழைப்பவராகவும் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு ஏழரை சனி முடியும் காலத்தில் அவ்வளவு வெற்றி பெற்ற நபராக இருந்திருப்பீர்கள்.
ஏழரைச் சனியில் திருமணம் செய்யலாமா?
ஏழரை சனி காலத்தில் கட்டாயம் திருமணம் நடக்கும். பெரும்பாலானவர்களுக்கு ஜென்ம சனி அல்லது ஏழரை சனி காலத்தில் திருமணம் நடக்கும். சனி உங்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று கூறப்படும் ஏழாவது வீடு அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஏதோ ஒரு விஷயத்தோடு தொடர்பு கொண்டிருந்தால், திருமண வயதில் இருப்பவர்களுக்கு ஏழரை சனி காலத்தில் கட்டாயமாக திருமணம் நடக்கும்.முதல் சனிச் சுற்றில் திருமணம் யோகமானது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் சிறிது காலம் தாழ்த்தியே திருமணம் செய்வது நல்லது.
அதாவது, ஏழரை சனியானது ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி, ராசிக்கு வந்தால், அது ஜென்ம சனியாகும், அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வந்தால் அது குடும்ப சனி என்றும் கூறுவார்கள். ஒருவரின் ஜென்ம ராசியில் ஏழரைச் சனி இருக்கும் போது திருமணம் செய்தால் திருமண வாழ்வில் தீராத பல குழப்பங்கள் வரும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறையும். நோய் தாக்கம், குழந்தைப் பாக்கியம் இல்லாமை, குறைவான மாங்கல்யப் பலம் மற்றும் திருமண வாழ்க்கையின் சந்தோஷம் நீங்கி, கஷ்ட நிலைகள் அதிகமாகும் என்று ஜோதிடத்தில் கூறியுள்ளனர்.
எனவே, ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா என்பது ஜாதகத்தை பொறுத்தது. ஜோதிடரின் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. வேறு ராசியில் ஏழரைச் சனி நடக்காத நபரை திருமணம் செய்து கொள்ளலாம். பாதிப்புகள் அதிகமாக இருக்காது.



Click it and Unblock the Notifications











