Latest Updates
-
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சூரியன், புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நிறைய லாபம் கிடைக்கப்போகுது..
Budhaditya Rajyoga In Virgo: ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதோடு, அவ்வப்போது கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்வதுண்டு.
இப்படி கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் பயணிக்கும் போது, அது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். இப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனான புதன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் செல்கிறார். அதன் பின் சில நாட்களில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் கன்னி ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் புதனின் சிறப்பான அருளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரியன் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிகுந்த ஆற்றல் நிறைந்து இருப்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறக்கூடும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதால், வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.
புதிய வருமான ஆதாரங்களை பெறக்கூடும். வியாபாரிகள் தங்களின் புதிய திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குழந்தைகளால் சில நற்செய்திகளை பெறுவீர்கள். பங்குச் சந்தையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications