Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தமிழ் புத்தாண்டில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப்போகுது..
Tamil New Year 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று மங்களகரமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும்.
புத்திகாரகனான புதன் ஏற்கனவே மார்ச் மாதத்தின் இறுதியில் மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் மேஷ ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்நாளில் தான் தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடம் பிறக்கிறது. பொதுவாக யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தை பெறுவதோடு, அதிர்ஷ்டமும் பிரகாசிக்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்கள் புதாதித்ய ராஜயோகத்தால் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாவதால், கடக ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகளை இக்காலத்தில் வெற்றி பெறுவீர்கள்.
குடும்ப சூழல் நன்றாக இருக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள் மற்றும் நல்ல லாபத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலமானது சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவருடன் நிறைய நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 14 முதல் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வத்ற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications