Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
ஆடி வெள்ளிக் கிழமையில் அம்மனை வழிபடுவதால் எந்த மாதிரியான வரங்கள் உங்கள் வீடு தேடி வரும் தெரியுமா?
ஆடி வெள்ளி தமிழ் மாதத்தின் புனிதமான வெள்ளியாக கருதப்படுகிறது. இந்த ஆடி வெள்ளிக் கிழமை என்பது பெண்களுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த ஆடி வெள்ளிக் கிழமையில் அம்மனை வணங்கி ஏராளமான வரங்களை பெறுவார்கள்.
இதனால் குடும்பத்தில் சந்தோஷமும், செல்வங்களும் நிலைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது உண்டு. பொதுவாக வெள்ளிக் கிழமையை சுக்ர வாரம் என்று அழைக்கின்றனர்.

இந்த ஆடி வெள்ளியன்று அம்பிகையை, ஆதிபராசக்தியை அலங்கரித்து பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இந்த ஆடி வெள்ளிக் கிழமையில் அம்மனை வழிபடுவதால் எந்த மாதிரியான வரங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஆடி வெள்ளிக்கு பின்னால் உள்ள புராணங்கள்
நமது புராணங்களின் படி, ஆடி மாதத்தில் உலகில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட சக்தி தேவி என்பவள் பச்சை அம்மன் தேவியாக காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளிக் கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் நிலைக்கும். மேலும் இளம் கன்னிப் பெண்களுக்கு திருமணமும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஆடி வெள்ளிக் கிழமை சடங்குகள்
ஆடி வெள்ளிக் கிழமைகளில் சக்தி தேவி வெவ்வேறு சக்தி வாய்ந்த வடிவங்களில் காட்சி தருகிறார்.
ஆடி வெள்ளிக் கிழமையின் முதல் நாள் செல்வத்தின் அதிபதியாக ஸ்வர்ணாம்பிகை தேவியாக சக்தி தேவி காட்சி அளிக்கிறார். அவளை பார்வதி தேவியாக நினைத்து விரதம் அனுஷ்டித்து பூஜை வழிபாடுகள் எல்லாம் செய்து ஆசி பெறுவார்கள்.
இரண்டாவது வெள்ளிக் கிழமையில் மிகவும் மூர்க்கமான மற்றும் தைரியமான இந்து தெய்வமான காளி தேவியின் வடிவமாக காட்சி அளிக்கிறார். இந்த நாளில் காளி தேவியை வழிபடுவது ஒருவரின் வாழ்க்கையில் செழிப்பையும், புத்திசாலித்தனத்தையும் கொடுக்கும்.
மூன்றாவது வெள்ளிக் கிழமை காளிகாம்பாளுக்கு அர்பணிக்கப்பட்டது. இவர் உச்ச தெய்வமான பார்வதியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. காளிகாம்பாள் தைரியம் மற்றும் சுபாவத்தின் முக்கிய தெய்வம் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையில் உயிர்ச்சக்தியை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் தெய்வமாகும்.
நான்காவது வெள்ளிக் கிழமைகளில் காமாட்சி அம்மனை வணங்குகிறார்கள். பக்தர்களை ஆரோக்கியமாகவும், நேர்மறையாகவும் வைத்திருக்க உறுதுணையாக இருப்பவள்.
ஆடி மாதத்தின் ஐந்தாவது வெள்ளிக் கிழமை லட்சுமி தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குவது மக்களின் பொருளாதாரத்தில் ஏற்றத்தை உண்டாக்கும்.
ஆடி வெள்ளிக் கிழமை வழிபாடுகள்
ஆடி வெள்ளிக் கிழமையில் அம்மனின் அருளைப் பெற விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கடலைப் பருப்புப் பிரசாதம், சக்கரைப் பொங்கல், அக்கரவடிசல், தேங்காய் பூர்ணப் பிரசாதம் ஆகியவை தயாரித்து அம்மனுக்கு படைக்கப்படுகிறது. இந்த மாதம் சந்திரனின் ஆட்சிக்கு அர்பணிக்கப்பட்டது. எனவே இந்த மாதத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.
ஆடி வெள்ளிக் கிழமை வழிபாட்டால் உங்கள் வீடு தேடி வரும் வரங்கள்
- ஆடி வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபடுவதால் உங்கள் வீடு தேடி ஏராளமான வரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள் .
- ஆடி வெள்ளிக் கிழமை வழிபாடு வீட்டில் நேர்மறை சக்திகளையும் சிந்தனைகளையும் ஏற்படுத்தும். இதுவே உங்கள் வீட்டில் செழிப்பை அதிகரிக்கும்.
- ஆடி வெள்ளி விழாக்கள் அறிவை தர உதவுகிறது. இது உங்கள் ஞானத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது.
- அம்மனின் அருளால் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை நீங்கள் எளிதில் சமாளிக்க முடியும்.
- ஆடி வெள்ளி கொண்டாட்டங்கள் பொது, உடல், மன மற்றும் சமூக நலனை மேம்படுத்துகிறது.
- குடும்பத்தின் மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது.
- வாழ்க்கையில் நம்பமுடியாத சாதனைகளை அடைய விரும்புபவர்கள் ஆடி வெள்ளியை மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடித்து பலன் பெறலாம்.
- ஆடி வெள்ளி திருவிழா விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. எனவே வழிபடுபவர்கள் அவர்களின் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறலாம். அவர்களின் ஆசீர்வாதங்கள் பக்தரின் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுகின்றன.
- உறவுகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க ஆடி வெள்ளி வழிபாடு உதவுகிறது.
- திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றை தர உதவுகிறது.
- ஆடி வெள்ளி வழிபாடு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை தர உதவுகிறது.
எனவே இந்த ஆண்டு ஆடி வெள்ளி வழிபாட்டை சிறப்பாக செய்து அம்மனின் அருளையும் ஆசியையும் பெற்று வாழ்வில் நலம் சிறக்க வாழ்த்துகிறோம்.



Click it and Unblock the Notifications
