Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க..
Vastu Tips In Tamil: உங்கள் பர்ஸில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் நிலைத்திருப்பதில்லையா? ஏதாவது ஒரு செலவு வந்து, உங்கள் பர்ஸை காலி செய்துவிடுகிறதா? இதனால் எப்போதும் உங்கள் பர்ஸ் பணம் இல்லாமல் காலியாகவே இருக்கிறதா? இதற்கு ஒரு தீர்வை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வாஸ்து கூறும் ஒரு எளிமையான செயலை செய்யுங்கள். இது கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருக்கலாம்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இச்செயலை செய்யும் போது பர்ஸில் பெரிய அற்புதம் நிகழும். அது என்னவென்றால், ஒரு துண்டு சிவப்பு பேப்பரை பர்ஸில் வைப்பது தான். அதென்ன சிவப்பு பேப்பர் என்று கேட்கலாம். பொதுவாக சிவப்பு நிறமானது ஆற்றலையும், செழிப்பையும் ஈர்க்கும் நெருப்பு தத்துவத்தைக் குறிக்கிறது. எனவே இந்த சிவப்பு நிற பேப்பரை ஒருவர் பர்ஸில் எப்போதும் வைத்திருக்கும் போது, பண பிரச்சனைகளும், செலவுகளும் குறைவதோடு, சில அற்புதங்களும் நிகழும். இப்போது அது என்னவென்பதைக் காண்போம்.
சிவப்பு நிற பேப்பரை ஏன் பர்ஸில் வைக்க வேண்டும்?
உங்கள் பர்ஸில் எப்போதும் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு துண்டு சிவப்பு நிற பேப்பரை பர்ஸில் வையுங்கள். ஏனெனில் சிவப்பு நிறமானது தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பி, உங்கள் பர்ஸில் பணம் குவிய வழிவகை செய்யும். அதோடு தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.
சிவப்பு நிற பேப்பரை பர்ஸில் வைப்பதால் பெறும் நன்மைகள்
1. பண காந்தம் போல செயல்படும்
காந்தம் எப்படி இரும்பை ஈர்க்குமோ, அதேப் போல் சிவப்பு நிற பேப்பர் பண காந்தம் போல் செயல்பட்டு பணத்தை ஈர்க்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பணம் வைக்கும் பர்ஸில் ஒரு சிவப்பு நிற பேப்பரை வைத்திருப்பது, செல்வத்தையும், புதிய வருமான வழிகளை ஈர்க்கவும், பண வரவில் உள்ள தடையை அகற்றவும் உதவுகிறது.
2. தேவையற்ற செலவுகள் கட்டுப்படும்
பர்ஸில் சிவப்பு நிற பேப்பரை வைத்திருப்பது, ஒருவர் செய்யும் செலவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது தேவையில்லாமல் செய்யும் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும். எப்படி சிவப்பு நிறம் ஆபத்தைக் குறிக்கும் நிறமாக உள்ளதோ, அந்த சிவப்பு நிற பேப்பரை பர்ஸில் வைத்திருக்கும் போது, ஒவ்வொரு முறை செலவு செய்ய பணத்தை பர்ஸில் இருந்து எடுக்கும் போது செலவுகளைக் கருத்தில் கொள்ளும்படி உங்களுக்கு நினைவூட்டும்.
3. ஆற்றலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்
சிவப்பு நிறமானது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட சிவப்பு நிற பேப்பரை பர்ஸில் வைத்திருக்கும் போது, அது பாதுகாப்பின்மையையும் பயத்தையும் தணித்து, வருமானத்தை மேம்படுத்த முடியும் என்ற மன உறுதியை அளிக்கிறது. மேலும் இது தொழிலில் முன்னேற்றத்துடன் தொடர்புடைய துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது.
எனவே உங்களின் பண வரவை அதிகரிக்கவும், நிதி அதிர்ஷ்டத்தைப் பெறவும் இந்த எளிய வாஸ்து பரிகாரத்தை பின்பற்றுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
