பிரியாணி இலையை இந்த மாதிரி எரிச்சா.. பணம் அதிகம் சேருமாம்... ட்ரை பண்ணி பாருங்க...

Bay Leaves For Money In Tamil: ஜோதிடத்தின் படி, நமது வீட்டின் சமையலறையில் உள்ள பல மசாலா பொருட்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இந்த மசாலா பொருட்களை சரியான வழியில் ஒருவர் தங்களின் வீட்டில் பயன்படுத்தி வந்தால், வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதோடு, நிதி நிலையை அதிகரிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு மசாலா பொருள் தான் பிரியாணி இலை.

பிரியாணி இலை நீண்ட காலமாக செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. பல கலாச்சாரங்களில், பிரியாணி இலை பணத்தை ஈர்க்கும் ஒரு மந்திர இலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் பிரியாணி இலையில் உள்ள வலுவான மணம் தான். ஏனெனில் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி நல்ல வாசனை நிறைந்த பொருட்களில் குடியிருப்பாள். எனவே இந்த இலையை வீட்டில் பயன்படுத்தும் போது லட்சுமி தேவி நம் வீட்டிற்கு குடிபுகுந்து, வீட்டின் நிதி நிலை மேம்படும் என்பது நம்பிக்கை.

Bay Leaves For Money: How To Use Bay Leaf To Get More Money In Tamil

பிரியாணி இலை வீட்டில் பணத்தை அதிகம் சேர உதவுவதோடு, வீட்டில் உள்ள பல பிரச்சனைகளை களைய உதவுகின்றன. இப்போது செல்வம் பெருக, பிரச்சனைகள் குறைய பிரியாணி இலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.

கணவன்-மனைவி சண்டை குறைய...

வீட்டின் அமைதி கெடும் வகையில் கணவன்-மனைவி இடையே சண்டை அதிகம் வருகிறதா? வீட்டில் எர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் தான், இப்படி தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் அதிகம் வரும். இதைக் குறைக்க தினமும் 2 பிரியாணி இலையை எரித்து அதன் புகையை வீட்டைச் சுற்றி காட்டுங்கள். இதனால் தம்பதிகளுக்கு இடையே வரும் சண்டைகள் குறைந்து, வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

கண் திருஷ்டி விலக...

உங்கள் வீட்டில் உள்ளோர் மீதான கண் திருஷ்டியை போக்க வேண்டுமானால், பிரியாணி இலை அதற்கு பெரிதும் உதவி புரியும். அதற்கு 7 பிரியாணி இலைகளை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் உப்பையும் எடுத்து, தலைக்கு மேல் 7 முறை சுற்ற வேண்டும். இந்த செயலை யாரிடமும் சொல்லாமல், வீட்டின் வெளியே தூக்கி எறிந்துவிட வேண்டும். இப்படி செய்தால், கண் திருஷ்டி விலகும்.

பணம் அதிகரிக்க...

உங்கள் வீட்டில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக ஏற்படுகிறதா? உங்கள் கையில் பணம் நிற்பதில்லையா? அப்படியானால் வெள்ளிக்கிழமை ஒரு பிரியாணி இலையை எடுத்து அதை லட்சுமி தேவியின் பாதங்களில் வைத்து, பணம் எப்போதும் கையில் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதில் வேண்டி, பின் அந்த பிரியாணி இலையை பணம் வைக்கும் பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி செய்வதால், பணப் பிரச்சனை ஏற்படாது மற்றும் கையில் எப்போதும் பணம் நிலைத்திருக்கும். இது தவிர, பிரியாணி இலையை எடுத்து, அதன் மேல் உங்கள் ஆசைகளை எழுதி, அதன் பின் அதை எரித்தால், அந்த ஆசை நிறைவேறுமாம்.

தொழிலில் வெற்றி காண...

நீங்கள் ஏதேனும் ஒரு முக்கியமான வேலையை செய்யப் போகிறீர்களா? அந்த வேலையில் எந்த தடையும் ஏற்படக்கூடாது என்று நினைத்தால், சனிக்கிழமைகளில் 5 பிரியாணி இலைகளை எடுத்து, அத்துடன் 5 மிளகையும் எடுத்து, எரித்துவிடுங்கள். இப்படி செய்வதால், உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, உங்களின் வேலையில் இருக்கும் தடைகளும் நீங்கும்.

கெட்ட கனவுகளை தடுக்க...

தினமும் கெட்ட கனவுகள் உங்கள் தூக்கத்தை கெடுக்கிறதா? உங்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியானால் நீங்கள் தூங்கும் முன், ஒரு பிரியாணி இலையை தலையணைக்கு கீழ் வைத்து தூங்குங்கள். இதனால் கெட்ட கனவுகள் வருவது நின்றுவிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, April 10, 2023, 12:30 [IST]
Desktop Bottom Promotion