Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இந்த பழக்கங்கள் இருந்தா கைவிடுங்க.. இல்லன்னா லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Habits That Makes Goddess Lakshmi Angry In Tamil: இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாகும். ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்பினால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்றியிருக்க வேண்டும். பணம் அதிகம் வீட்டில் சேர வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவருமே லட்சுமி தேவியின் அருளைப் பெற மற்றும் லட்சுமி தேவியை மகிழ்விக்க பல்வேறு நடவடிக்கைகளை வீட்டில் மேற்கொள்வார்கள்.
ஆனால் நமது ஒருசில பழக்கங்கள் லட்சுமி தேவியை வருத்தப்பட வைப்பதோடு, அவரது கோபத்திற்கும் ஆளாக்கும். எனவே உங்கள் வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் குடியிருக்க வேண்டுமானால், அவருக்கு பிடிக்காத விஷயங்களை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

சரி, எந்த பழக்கங்கள் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே லட்சுமி தேவியின் கோபத்தை அதிகரிக்கும் சில பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்களிடம் அந்த பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள்.
1. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது
லட்சுமி தேவி தூய்மையை விரும்புபவர். நல்ல சுத்தமான இடத்தில் தான் எப்போதும் அவர் குடியிருக்க விரும்புவார். எனவே உங்கள் வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் குடியிருக்க வேண்டுமானால், வீட்டை சுத்தமாக வைத்திருங்கள். வீட்டின் மூலைகளில் ஒட்டடை இருந்தால், அதை கண்களில் பட்ட உடனே அப்புறப்படுத்துங்கள்.
2. கோபம் மற்றும் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது
அனைவருக்குமே கோபம் வருவதுண்டு. ஆனால் அந்த கோபம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாமல் ஒருவர் மீது கோபப்பட்டு அசிங்கமான வார்த்தைகளால் ஒருவரை திட்டும் போது, அந்த சூழலில் எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். இப்படி எதிர்மறை ஆற்றல் நிரம்பியுள்ள பகுதியில் லட்சுமி தேவி ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டார். ஆகவே உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், வீடானது அமைதியாகவும், அன்பு நிறைந்தும் இருக்க வேண்டும்.
3. அசுத்தமான ஆடைகளை அணிவது
லட்சுமி தேவிக்கு சுத்தமாக இருப்பவர்களை ரொம்பவும் பிடிக்கும். எனவே நீங்கள் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளைப் பெற விரும்பினால், தினமும் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, நல்ல சுத்தமான ஆடைகளை அணியுங்கள். முக்கியமாக வீட்டில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்காமல், தினந்தோறும் துவைத்துவிடுங்கள். இதனால் லட்சுமி தேவியின் மனதில் இடம் பெற்று நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம்.
4. தாமதமாக எழுவது மற்றும் மாலை வேளையில் தூங்குவது
தூக்கம் ஒருவருக்கு இன்றியமையாதது தான். ஆனால் காலையில் சூரியன் உதிர்த்த பின்னர் போர்வையை இழுத்து போர்த்தி தூங்குவது மற்றும் மாலை வேளையில் வீட்டிற்கு லட்சும தேவி வருகை தரும் போது தூங்கினால், அது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இம்மாதிரியான பழக்கம் கொண்டவர்களை லட்சுமி தேவிக்கு பிடிக்காது மற்றும் இவர்களிடம் ஒருபோதும் லட்சுமி தேவி இருக்கமாட்டார்.
5. பிரம்ம முகூர்த்தம் அல்லது மாலையில் உறவில் ஈடுபடுவது
ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்பினால், முதலில் கடவுளை மதிக்க வேண்டும் மற்றும் அவரை வழிபட வேண்டும். கடவுளை வழிபட சிறந்த நேரம் அதிகாலை 2 முதல் 4 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த நேரமும், மாலை வேளையும் தான். சனாதன தர்மத்தின் படி, கடவுளை வழிபட சிறந்த நேரம் அதிகாலை 2 முதல் 4 மணி வரையிலான காலகட்டம் தான். இந்த நேரத்தில் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டால் அல்லது கடவுளை வழிபடுவதைத் தவிர்க்கும் போது, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோபமடைந்து, பண பற்றாக்குறையை சந்திக்க வைப்பார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications