Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இஸ்ரேல்-ஈரான் பிரச்சினையால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்பிருக்கா? பாபா வங்காவின் அதிர்ச்சியளிக்கும் கணிப்பு..!
உலகையே உலுக்கிய அமெரிக்காவின் 9/11 தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை சரியாகக் கணித்த பார்வையற்ற பாபா வங்கா, 2024 இல் மூன்றாம் உலகப் போரைப் பற்றிய பயங்கரமான கணிப்பையும் செய்துள்ளார்.தற்போது, ஈரான் இஸ்ரேலை தாக்கி, பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த உலகப் போர் பற்றிய கணிப்புகள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேல்-உக்ரைன் போர் தொடங்கிய காலம் முதலே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

பாபா வங்கா ஒரு பல்கேரிய தீர்க்கதரிசி ஆவார், அவர் தனது சில அறிவிப்புகள் உண்மையாகிய பிறகு கான்சிபிரசி கோட்பாட்டாளர்களிடையே ஒரு முக்கிய நபராக பாபா வங்கா உருவெடுத்தார். அவர் 28 ஆண்டுகளுக்கு முன்பு 1996 இல் இறந்தார்.
பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாபா வங்கா, 5079 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் உலகில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வை கணித்துள்ளார், அவருடைய கணிப்பின் படி அதற்குப்பின் உலகம் அழிந்துவிடும்.
2024 ஆம் ஆண்டில், பயோலாஜிக்கல் தாக்குதல்கள், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 3 ஆம் உலகப் போர் போன்ற பல மோசமான நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ளார், மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்ததால், கடந்த ஏப்ரல் 13 அன்று, ஈரான் கிட்டத்தட்ட 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, பாபா வங்கா ஒரு பயங்கர விஷயத்தைக் கணித்துள்ளார், அதன்படி ஒரு 'பெரிய நாடு' உயிரியல் போரில் ஈடுபடக்கூடும் என்று கூறியுள்ளார். ஹமாஸின் தெற்கு இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்த விஷயத்தில் முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்த தீர்க்கதரிசி எச்சரித்திருந்தார்.
வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்றும் அழைக்கப்படும் பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்த பிறகு, எதிர்காலத்தைப் பார்க்க உதவிய கடவுளிடமிருந்து ஒரு அரிய பரிசு கிடைத்ததாகக் கூறினார்.
உண்மையாகிய பாபா வங்காவின் கணிப்புகள்
நியூயார்க் நகரில் 9/11 இரட்டைக் கோபுரதாக்குதல்கள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகியவை பாபா வாங்காவின் கணிப்புகளில் உண்மையாகிய முக்கியமான கணிப்புகளாகும்;.
தீர்க்கதரிசி தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய், 1997 இல் இளவரசி டயானாவின் மரணம் மற்றும் 1986 இல் உக்ரைனில் நடந்த செர்னோபில் பேரழிவு போன்றவற்றை முன்கூட்டியே கணித்தார். அதனால்தான் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது அந்த ஆண்டு பற்றோ பாபா என்ன தெரிவித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றி கணிக்கும்போது, பாபா வங்கா, "கொரோனா வைரஸ் நம் முழுவதிலும் இருக்கும்" என்று கூறினார்.
1989-லியே, உலக வர்த்தக மையத்தின் மீதான 9/11 தாக்குதல்களைப் பற்றி பாபா வங்கா கணித்து கூறியபடி, "திகில், திகில்! எஃகுப் பறவைகளின் தாக்குதலால் அமெரிக்க சகோதரர்கள் வீழ்வார்கள். ஓநாய்கள் புதரில் ஊளையிடும், அப்பாவிகளின் இரத்தம் பொங்கி வரும் (Horror, horror! The American brethren will fall after being attacked by the steel birds. The wolves will be howling in a bush, and innocent blood will be gushing)" என்று கணித்துள்ளார்.
பராக் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக வருவதைப் பற்றியும் பாபா வங்கா சரியான கணிப்புகளை கூறியிருந்தார், இருப்பினும் அவர்தான் கடைசியாக கறுப்பின ஜனாதிபதியாக இருப்பார் என்று அவர் கூறினார்.



Click it and Unblock the Notifications












