Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
பாபா வாங்காவின் உறைய வைக்கும் கணிப்பு: புதிய வைரஸ் தோன்றி விரைவில் மக்களை முதுமையாக்கி பேரழிவை உண்டாக்கும்!
Baba Vanga Scary Predictions: பல்கேரியாவின் மிகவும் பிரபலமான தீர்க்கதரசி தான் பாபா வாங்கா. இவர் பார்வையற்றவர். சிறு வயதில் மின்னல் தாக்கியதில் இவரது பார்வை பறிபோனது. அதோடு இந்த சம்பவத்தில் இருந்து இவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் ஆற்றலும் கிடைத்தது.
இந்த பாபா வாங்கா 1996-ல் காலமானார். இவர் உயிருடன் இருக்கும் வரை எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை தனது குறிப்பில் ஆண்டு வாரியாக எழுதி வைத்துள்ளார். இவரது குறிப்புகளில் பல சம்பவங்கள் இன்று வரை உண்மையாகி வருகின்றன.

அதுவும் இவர் 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளர். இதனால் ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை பாபா வாங்காவின் குறிப்புகளின் மூலம் தெரிந்து கொள்ள பலரும் விரும்புவர்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பல மோசமான சம்பவங்கள் நடக்குமென்று பாபா வாங்கா ஏற்கனவே கணித்துள்ளார். உதாரணமாக, இவர் 2025-ல் பூகம்பங்கள் வந்து பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். அதற்கேற்ப மியான்மரில் பூம்பத்தால் 1700 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த ஆண்டு ஐரோப்பாவின் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார பேரழிவு உள்ளிட்டவை நடக்கும் என்றும் பாபா வாங்கா கூறியுள்ளார். அதற்கேற்ப ஈரான்-இஸ்ரேல் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு வைரலாகி வருகிறது. அது என்னவெனில், அவர் ஒரு ஆபத்தான வைரஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதுவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த வைரஸ் வேகமாக பரவுவதோடு, மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இந்த வைரஸ் மக்களின் வயதை வேகமாக அதிகரிக்கும். மேலும் மக்கள் விரைவில் வயதானவர்களாக காட்சியளிக்கத் தொடங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு பாபா வாங்கா 2084-ல் இயற்கையில் பெரிய மாற்றங்களைக் காணக்கூடும். அதுவும் இந்த ஆண்டில் இயற்கை புத்துயிர் பெறத் தொடங்கும். 2088 ஆம் ஆண்டில் ஒரு வைரஸ் மக்களிடையே பரவத் தொடங்கி, மக்கள் வேகமாக வயதாகத் தொடங்குவார்கள். இளமையிலேயே முதுமை நோய்களால் அவதிப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின் 2097 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் வேரோடு அழிக்கப்படும். பின்பு 2111 ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் ரோபோக்களாக மாறத் தொடங்குவார்கள். ரோபோக்கள் போன்றே வேலை செய்யத் தொடங்குவார்கள் என்றெல்லாம் கணித்துள்ளார். முக்கியமாக 5079 ஆம் ஆண்டில் உலகம் முடிவுக்கு வரும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
பாபா வாங்காவின் வேறு சில ஆண்டு வாரியான கணிப்புகள்
2025: ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் ஏற்பட்டு, அது மக்கள்தொகையை கடுமையாக பாதிக்கும்.
2028: மனிதர்கள் வீனஸை ஒரு ஆற்றல் வளமாக ஆராயத் தொடங்குவார்கள்.
2033: பனிக்கட்டிகள் உருகத் தொடங்கி, கடல் மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும்.
2076: கம்யூனிசம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவும்.
2130: மனிதகுலம் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும்.
2170: பரவலான வறட்சி உலகின் பெரும்பகுதியை கடுமையாக பாதிக்கும்.
3005: பூமி செவ்வாய் கிரகவாசிகளுடன் போரில் ஈடுபடும்.
3797: பூமி வாழத் தகுதியற்றதாக மாறும் போது மனிதர்கள் அதை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5079: உலகம் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











