Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பாபா வாங்கா 2025-ல் நடக்குமென கூறிய 2 விஷயங்கள்.. 1 நடந்துவிட்டது.. இன்னொன்று நடக்குமா?
Baba Vanga Predictions About War in 2025: தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உச்சத்தில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத்தளமான பஹல்காமில் கடந்த மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். எதிர்பாராத விதமாக திடீரென்று நடத்திய இந்த கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கியது.
இந்த பயங்கரவாதிகளின் மோசமான தாக்குதலுக்கு இந்தியா கட்டாயம் தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தொடர் ஏவுகணைகளை ஏவி, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பெரிய போர் எழக்கூடும் என்ற ஒரு அச்சம் எழுகிறது.

இதைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை ஏற்கனவே கணித்து தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ள மிகவும் பிரபலமான தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டின் கணிப்பு நடக்கப் போகிறேதோ என்று தான் தோன்றுகிறது. ஏனெனில் பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருப்பதை தனது குறிப்பில் எழுதியுள்ளார். அதே போல் 2025 ஆம் ஆண்டில் இருநாடுகளிடையே பெரிய போர் எழக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ப தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் போராக எழுவதற்கும் வாய்ப்புள்ளது.
நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, உண்மையில் பாபா வாங்கா ஐரோப்பாவின் அஸ்திவாரங்களையே அசைக்கும் ஒரு மோதல் குறித்து எச்சரித்திருந்தார். இருப்பினும் அவரது கணிப்பில் எந்த குறிப்பிட்ட நாடுகளின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அது இப்போது தற்போதைய புவிசார் அரசியல் சூழலுடன், குறிப்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பதற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிலப்பரப்பு எவ்வளவு கணிக்க முடியாததாகவும் ஆபத்தானதாகவும் மாறிவிட்டதால், மக்கள் அவரது வார்த்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது தவிர, பாபா வாங்கா 2025-ல் பெரிய போர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறியதை தவிர, இந்த ஆண்டில் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான பூகம்பங்கள் ஏற்படப் போவதைப் பற்றியும் கூறியிருந்தார். இதில் இவரது கணிப்புகளுள் ஒன்று ஏற்கனவே நிறைவேறிவிட்டது. அதாவது 2025 மார்ச் 28 ஆம் தேதி அன்று மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கி 1,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் உணரப்பட்டது. அதன் விளைவாக அங்கு 10 பேர் இறந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
பாபா வாங்கா யார்?
பாபா வாங்கா என்பது 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்தார். இவரது உண்மையான பெயர் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா. இவர் தனது 12 வயதில் கடுமையான புயலின் காரணமாக தனது பார்வையை இழந்தார். இந்த நிகழ்வின் போது பார்வையை இழந்த அவருக்கு, எதிர்காலத்தை கணிக்கும் சக்தி அவருக்கு கிடைத்துள்ளது. இவரது பல கணிப்புகள் இன்று வரை நடந்துள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இவரது அந்த ஆண்டிற்கான கணிப்பை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருப்பர். என்ன தான் பாபா வாங்கா 1996-ல் காலமானாலும், அவரது சீடர்களும், விசுவாசிகளும் அவரது கணிப்புகளை பரப்பி வருகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











