Latest Updates
-
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு?
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி 2123-ல் இந்த நாடுகளுக்குள் நடக்கப்போகும் போர் உலகையே அழிக்கப் போகுதாம்...!
உலக வரலாற்றில் எதிர்காலத்தை கணிக்கும் பல புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவர்டான் பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா. அவர் உயிருடன் இருந்த போது கணித்த பல கணிப்புகள் அவர் இறந்து பல வருடமாகியும் இப்போதும் ஒவ்வொன்றாக பலித்து வருகின்றன. அதனால்தான் ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் மக்கள் அந்த ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
அவரது கணிப்புகளில் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாபா வாங்காவின் புதிய எதிர்கால கணிப்பின்படி, 2123 ஆம் ஆண்டில், அதாவது இப்போதிருந்து 98 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறிய நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிடத் தொடங்கும். இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஒரு உலகப் போர் வெடிக்கும்.

பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2123 ஆம் ஆண்டு நடக்கப்போகும் போரில் எந்த பெரிய நாடும் பங்கேற்காது. வரப்போகிற 100 ஆண்டுகளில், உலகின் பெரிய நாடுகள் அனைத்தும் அசுர வளர்ச்சியை அடையப்போகிறது, எனவே அவை ஒன்றுக்கொன்று சண்டையிட வேண்டிய அவசியமில்லை என்று தீர்க்கதரிசனம் கூறுகிறது.
வரவிருக்கும் காலங்களில், உணவு, நீர் போன்ற பல்வேறு விஷயங்களின் பற்றாக்குறைகளுக்காக சிறிய நாடுகள் மற்ற சிறிய நாடுகளுக்கு எதிராக போரை அறிவிக்கும். இருப்பினும், இந்த கணிப்புகள் எவ்வளவு உண்மை என்பதை காலம் மட்டுமே சொல்லும், ஆனால் வாங்காவின் பெரும்பாலான கணிப்புகள் உண்மையாகிவிட்டன என்பதே உண்மை. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழல் இந்த கணிப்பு பலிக்க அதிக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.
இதேபோல இணையத்தில் தற்போது மிகவும் வைரலாகி வரும் பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு மனிதர்களின் ஆயுட்காலத்தைப் பற்றியது. அந்த கணிப்பு கூறுவது என்னவெனில் இன்றிலிருந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2088 ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும், இதன் காரணமாக மனிதர்கள் விரைவாக வயதாகத் தொடங்குவார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் மனிதர்களின் வயது வேகமாக அதிகரித்து அவர்கள் மரணத்தை மிக விரைவாக நெருங்கத் தொடங்குவார்கள்.
அடுத்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு முதுமை பற்றிய பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகலாம், ஆனால் இன்றைய மாறிவரும் காலநிலை, உயிரியல் போர் மற்றும் ஆய்வகங்களில் வைரஸ்கள் உருவாக்கப்படும் சூழலில் இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த இரண்டு கணிப்புகளுமே மனித இனத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்த கணிப்புகளில் ஒன்று பலித்தாலும் எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
யார் இந்த பாபா வாங்கா?
பாபா வாங்கா 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே, ஒரு இயற்கை சீற்றத்தால் அவர் தனது பார்வையை இழக்க நேரிட்டது. பார்வை இழந்த பிறகு, எதிர்காலத்தை கணிக்க உதவிய ஒரு அற்புதமான சக்தியை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் 1996 இல் இறந்தார். இறப்பதற்கு முன், அவர் பல கணிப்புகளைச் செய்திருந்தார், அவை காலப்போக்கில் ஒவ்வொன்றாக உண்மையாகின. அவரது கணிப்புகள் பலித்ததன் காரணமாக, அவர் மேற்கின் பால்கன் நோஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படுகிறார். அதிர்ச்சி அளிக்கும் வகையில், பாபா வாங்கா 2025 முதல் 5079 வரை கணிப்புகளைச் செய்துள்ளார், இதில் பல ஆபத்தான கணிப்புகளும் உள்ளது.



Click it and Unblock the Notifications
