Baba Vanga: 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் சில உறைய வைக்கும் கணிப்புகள்! - ஷாக் ஆகாம படிங்க...

Baba Vanga Predictions 2025: உலகில் ஏராளமான தீர்க்கதரசிகள் உள்ளனர். அதில் பாபா வாங்காவின் கணிப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. பாபா வாங்கா என்பது பல்கேரியாவைச் சேர்ந்தவர். இவர் தனது 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் இவரது பார்வை போன பின், இவருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்கும் ஆற்றல் கிடைத்தது. இவர் இறப்பதற்கு முன் வரவிருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் சம்பவங்களை கணித்து குறிப்புக்களாக எழுதி வைத்துள்ளார். இதுவரை இவர் கணித்த பல கணிப்புகள் சரியாக நடந்துள்ளன.

இதனால் ஒவ்வொரு ஆண்டு பிறப்பதற்கு முன்பும், அந்த ஆண்டில் எந்த மாதிரியான நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் நடக்கும் என பாபா வாங்காவின் கணிப்பைத் தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவல் இருக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் நுழையவுள்ளோம். வருகிற 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் என்னவென்பதைக் காண்போம்.

Baba Vanga Most Chilling Prediction For 2025 In Tamil

2025 ஆம் ஆண்டில் என்ன நடக்கலாம்?

2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் சற்று அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ஏனெனில் 2025 ஆம் ஆண்டில் உலகின் முடிவு ஆரம்பமாகும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். மேலும் உலகமானது 5079-ல் அழியும் என்றும், அப்போது மனித இனிமே பூமியில் இருக்காது என்றும் அவரது குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025-ல் பெரிய மோதல்

பாபா வாங்காவின் கணிப்பின் படி, 2025 ஆம் ஆண்டு மனித குலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பேரழிவு சம்பவங்கள் நடக்கும். அதுவும் ஐரோப்பாவில் ஒரு பேரழிவை உண்டாக்கும் மோதல்கள் நடக்கும். இந்த மோதலால் ஐரோப்பா கண்டத்தில் சரிசரிசெய்ய முடியாத அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

2025-க்கு பின்

2025 ஆம் ஆண்டில் ஏற்படும் மோதல்களால் கணிசமான அளவில் மக்கள் தொகை குறையும். அதன் பின் 2028 ஆம் ஆண்டில் மனிதர்கள் புதிய வளங்களை தேடி வீனஸை அடைவார்கள் என்னும் பாபா வாங்கா தனது கணிப்பில் கூறியுள்ளார். பின்பு 2033 ஆம் ஆண்டில் துருவ பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார்.

பின் 2076 ஆம் ஆண்டில் கம்யூனிசம் திரும்பும் என்றும், 2130 ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகளுடன் மக்கள் தொடர்பு கொள்வார்கள் என்றும் கணித்துள்ளார். மேலும் 2170-ல் காலநிலை மாற்றத்தால் பூமியில் ஏராளமான அழிவுகள் ஏற்படும் மற்றும் பூமியில் வறட்சி அதிகரித்து, மனித வாழ்க்கை இன்னும் மோசமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

3005-ல் செவ்வாய் கிரகத்துடன் போர் நடக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். 3797-ல் மனிதன் பூமியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் கணித்துள்ளார். கடைசியாக, 5079-ல் உலகம் அழிந்து, மனித இனமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, October 12, 2024, 17:53 [IST]
Desktop Bottom Promotion