Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
பாபா வாங்காவின் மிரள வைக்கும் சில கணிப்புகள்.. இதுல நிறைய நடந்துருக்கு...
Baba Vanga Predictions In Tamil: பல்கேரியாவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான ஒரு தீர்க்கத்தரசி தான் பாபா வாங்கா. இவர் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணித்து கூறும் ஆற்றலைக் கொண்டவர். இவரது பல கணிப்புகள் இன்று வரை நடந்துள்ளன. 12 வயதில் இருக்கும் போது பாபா வாங்காவிற்கு பலத்த சூறாவளியால் பார்வை பறிப்போனது.
இந்நிகழ்வுக்கு பின் அவர் எதிர்காலத்தை கணிக்குத் திறனைப் பெற்றதாக நம்பப்படுகிறது. இவர் 1996 ஆம் ஆண்டில் காலமானார். இருப்பினும், இவர் தனது குறிப்பில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விஷயங்களை கணித்து குறிப்பிட்டுள்ளார். அவரது கணிப்புகளில் பல முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன.

அதாவது இளவரசி டயானாவின் மரணம் முதல் 9/11 நிகழ்வு வரை இவரது கணிப்புகள் நிகழ்ந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போதும், இந்த ஆண்டில் பாபா வாங்காவின் கணிப்புகள் என்னவென்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக உள்ளனர்.
முக்கியமாக 2024 ஆம் ஆண்டில் நடக்கவிருப்பதாக இவர் கணித்துள்ள பல விஷயங்களில் சில நிகழ்ந்துள்ளன. இப்போது 2024 ஆம் ஆண்டு மற்றும் வரவுள்ள ஆண்டுகளில் நடக்கவிருப்பதாக பாபா வாங்கா கணித்துள்ள சில மிரள வைக்கும் கணிப்புகளைக் காண்போம்.
மூன்றாம் உலகப் போர்
பாபா வாங்கா மூன்றாம் உலகப் போரைக் குறித்தும், இந்த போரானது முதல் மற்றும் இரண்டாவது உலகப் போரை விட அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் கணித்துள்ளார். இவர் மூன்றாவது உலகப் போர் என்று கணித்திருப்பது, அணுசக்தி போரைப் பற்றியதாகவே இருக்கக்கூடும். ஏனெனில் இந்த வகை போர் ஒரு கிரகத்தையே அழிக்கும் அளவிற்கு கொடியது.
இயற்கை பேரழிவுகள்
பாபா வாங்காவின் குறிப்புகளில் உலகம் அழியப் போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் வரக்கூடிய ஆண்டுகளில் பூகம்பம், சுனாமி முதல் எரிமலை வெடிப்புகள் வரை, பல இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்து, மோசமான உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
தொற்றுநோய்கள்
வரக்கூடிய ஆண்டுகளில் உலகம் தொற்றுநோய்களுடன் போராடும் என்று பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். உலகில் பலவிதமான தொற்றுநோய்களால் ஏராளமான உயிர்சேதம் ஏற்படும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்பிற்கு ஏற்ப 2021 முதல் உலகம் கோவிட்-19 என்ற கொடிய பெருந்தொற்றினால், மில்லியன் கணக்கான உயிர்களை இழந்தது. அதோடு தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான தொற்றுக்களும் பரவி வருகின்றன.
பொருளாதார நெருக்கடி
பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளுள் ஒன்று கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும். இவர் கணித்தது போன்றே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்றவை பொருளாதார நெருக்கடியை சமாளிக்கின்றன.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இந்த மாற்றங்களால் மனிதர்கள் உட்பட பல உயிரினங்கள் உயிர்வாழ கடுமையாக போராடும் அளவில் சுற்றுச்சூழல் பேரழிவுகளால் உலகம் போராடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முடிவு
பாபா வாங்காவின் மிரள வைக்கும் ஒரு முக்கியமான கணிப்பு தான் உலகம் 5079-ல் அழியும் என்பது. இவரது கணிப்புகளின் படி, இவர் இந்த ஆண்டு வரை மட்டுமே கணித்துள்ளார். இதனால் தான் உலகமானது 5079 வரையில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











