Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஏன் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படுகிறது? ஏன் அந்த நாள் அவ்வளவு விசேஷமான நாள்?
Ayodhya Ram Mandir: கோயில் என்றாலே அது புனித தலமாகும். அந்த வகையில் ராமர் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தற்போது கட்டப்பட்டு உள்ளது. இந்த ராமர் கோயிலுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என்பது ஒரு சிலையை தெய்வமாக மாற்றும் செயலாகும். சரி, இதற்கு ஏன் ஜனவரி 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பது தெரியுமா?
எந்தவொரு சுப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றாலும் இந்து சமூகத்தை பொறுத்தவரை நல்ல நாட்கள் பார்த்து செய்வார்கள். இந்து மரபுகளில் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்து நாட்காட்டி படியும், பஞ்சாங்கத்தின்படியும் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 22 ஆம் தேதி மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாள் குறித்து மேலும் பல விவரங்களை கீழே அறிந்து கொள்வோம்.

ஜனவரி 22 ஆம் தேதி ஏன் சிறப்பான நாள்?
வாரணாசியில் உள்ள ஜோதிடரும் துறவியுமான பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி ஜனவரி 22 ஆம் நாள் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். ஜனவரி 22 ஆம் தேதி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு " சிறந்த மஹீராத்" என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு வரை இத்தகைய மங்களகரமான நாள் கிடைக்காது என்று கூறியுள்ளார்.
கும்பாபிஷேகம் நெருங்கி வருவதால் தற்போது கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்குப் பிறகு வாராணசியைச் சேர்ந்த புகழ்பெற்ற அர்ச்சகர்கள் ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையின் நான்கு அறங்காவலர்களுடன் சேர்ந்து பிரான் பிரதிஷ்டையை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
இந்த பிரான் பிரதிஷ்டை என்பது கோயிலில் மிக முக்கியமான விழாவாகும். பிரான் பிரதிஷ்டை என்பது ஒரு சிலையை உயிர்ப்பிக்கும் விழாவாகும். அதற்கு பின் கடவுள் அந்த சிலையில் வசிக்க தொடங்குவார். இந்த நேரத்தில் வெறும் கல் ஒரு கடவுளாக மாறுகிறது. இப்பொழுது ஸ்ரீ ராமர் கருவறையில் ஆட்கொண்ட பிறகு அவர் மக்களுக்கு ஆசிகளை வழங்குவார். எனவே இந்த ஆத்மார்த்தமான சடங்கு மஹூரத்தின் போது செய்வது மிகவும் நல்லது.
ஜனவரி 22 ஆம் தேதியின் சிறப்பம்சங்கள்:
பகவான் ராமர் 'அபிஜீத் மஹுரத்தில்' பிறந்தார், எனவே பிரான் பிரதிஷ்டையை அதே வழியில் நடத்தினால் மிகவும் நல்லது. ஜனவரி 22 அன்று, மதியம் 12.30 மணியளவில் 84-வினாடிகள் 'அபிஜீத் மஹுரத்' வருகிறது. எனவே அந்த சமயத்தில் பிரான் பிரதிஷ்டை செய்வது ராமர் சிலையை உயிர்த்தெழ வைக்கும் என்பது ஆன்றோர்களின் கருத்து.
இதைத் தவிர்த்து இந்த நாளில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. பஞ்சாங்கத்தின்படி இந்நாளில் மிருகசீரிஷம் நட்சத்திரம், அமிர்த சித்தி யோகம், சர்வத சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் வியாழன் (குரு, கற்றல் மற்றும் ஞானத்தின் கிரகம்) சரியான நிலையில் இருக்கும் நாள் போன்ற ஒட்டுமொத்த அம்சங்கள் ஒரே நாளில் வருகின்றன.
இது குறித்து பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு வரை இது போன்ற மங்களகரமான மஹீராத் வராது. எனவே ஜனவரி 22 ஆம் தேதியின் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
ராமர் கோயில் இன்னும் முழுமையடையவில்லையா?
தற்போது வரை கோயிலின் முதல் தளம் மட்டுமே முழுமையடைந்து உள்ளது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் கோவில் முழுவதும் தயாராகி விடும். கோயில் முழுமையடைவதற்குள் பிரான் பிரதிஷ்டை செய்யலாமா? ஒரு கோயிலுக்கு பிரான் பிரதிஷ்டை பண்ணும் போது கோயில் முழுமையடைந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பகிரகம், முழுமையான கதவுகள், சுவர்கள் மற்றும் கூரைகள் போன்றவை முழுமையாக தயாராகி விடும். ஒரு சிலை செய்த உடனேயே பிரான் பிரதிஷ்டையை செய்யலாம் என்றும், கோவில் கட்டி முடித்தவுடன் கலச பிரதிஷ்டையை பிற்காலத்தில் செய்யலாம் என பல மகான்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே ஜனவரி 22 ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதே மாதிரி ஒரு இடத்தை புனிதமாக்க இந்து நம்பிக்கையின் படி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்து நம்பிக்கையின் படி, ராம ஜென்மபூமி பல நூற்றாண்டுகளாக புனிதமாக கருதப்பட்டு வருகிறது.
எனவே வருகிற ஜனவரி 22 ஆம் தேதியில் ராம லல்லாவின் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதன் மூலம் புனிதமான ராமர் சிலைக்கு உயிர்ப்பூட்ட முடியும் என்று பல மகான்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications