Latest Updates
-
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்..
அயோத்தி ராமர் கோயில் 1000 ஆண்டுகளாக நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாம்.. அது எப்படின்னு பாருங்க..
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கம்பீரமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த ராமர் கோயில் வெள்ளம், புயல் போன்ற பல இயற்கை சீற்றங்களை தாங்கக் கூடிய வகையில் கட்டப்பட்டு உள்ளது. மேலும் இந்த ராமர் கோயிலின் கட்டுமானம் 1000 வருடங்கள் நீடித்து நிலைக்க கூடியது என்கிறது அறிவியல். இது ஒரு வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் நம்பிக்கை மற்றும் நவீன அறிவியலின் கலவையாக உள்ளது.
இன்று ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோயிலின் சிறப்பே இது ஒரு வலிமையான கட்டடக்கலை ஆகும். மாடர்ன் தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய கட்டடக்கலை சிறப்புடன் கட்டப்பட்டு உள்ளது. எனவே இது 1000 ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்திருக்க கூடிய தன்மை வாய்ந்தது என்கிறது அறிவியல். அதைப்பற்றி இங்கே விரிவாக காண்போம்.

ராமர் கோயில் துல்லியமான திட்டமிடல்
டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிர்வாகத்துடன் லார்சன் மற்றும் டூப்ரோவால் (எல் & டி) இரண்டும் இணைந்து இந்த ராமர் கோயிலை துல்லியமாக திட்டமிட்டு கட்டி வருகின்றன. இன்றைய டெக்னாலஜியை பயன்படுத்தி புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களை அவர்கள் சேர்த்துள்ளனர்.
கோயிலானது பாரம்பரிய நாகரா பாணி ஸ்டைலில் கட்டப்பட்டு உள்ளது. 360 தூண்களைக் கொண்டு கட்டியுள்ளனர். கோயில் முழுவதும் முற்றிலும் கல்லால் ஆனது. இரும்பு மற்றும் எஃகு என எதுவும் பயன்படுத்தவில்லை. மற்ற பொருட்களைக் காட்டிலும் கல்லைக் கொண்டு கட்டும் போது அது நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்.
கோயிலின் அடித்தளம் வலிமை வாய்ந்தது
கோயிலின் கட்டுமானத்தில் மிக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று அதன் அடித்தளமாகும். இதன் அடித்தளம் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக 15 மீட்டர் தடிமனான உருட்டப்பட்ட கான்கிரீட் அடுக்கில் கட்டியுள்ளனர். இதற்காக சாம்பல், தூசி மற்றும் ரசாயனங்களால் செய்யப்பட்ட 56 அடுக்கு கான்கிரீட்கள் போடப்பட்டு உள்ளன.
இந்த வலுவான அடித்தளம் 21 அடி தடிமனான கிரானைட் பீடத்தால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த கோயிலை ஈரப்பதத்தில் இருந்து காக்க உதவுகிறது. அஸ்திவாரத்தின் தூண்கள் நிறுவப்பட்டு அவை வலிமைமிக்க ஆறுகளின் மேல் உள்ள பிரம்மாண்ட பாலங்களை ஆதரிக்கின்றன. இதனால் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தாலும் கோயில் வலிமையாக நிற்கும்.
கட்டுமானச் சவால்கள்
கட்டுமானம் செய்யும் போது 18 டிகிரிக்குக் கீழே சுய-கச்சிதமான கான்கிரீட்டின் வெப்பநிலையைப் பராமரிப்பது என்பது தனிச்சவாலாக இருந்தது . இதைச் சரி செய்ய அதற்காக on-site ice crushing plants பயன்படுத்தப்பட்டன. மேலும் வெளிப்புற வெப்பநிலையின் தாக்கத்தை குறைக்க இரவில் மட்டுமே அடித்தளம் போடப்பட்டது. இதற்காக 150 பொறியாளர்கள், ஆயிரக்கணக்கான குழுக்கள் நியமிக்கப்பட்டு இரவும் பகலும் அயராது உழைத்தனர்.
அறிவியல் முன்னேற்றம் கைகொடுத்தது
கோவிலின் வடிவமைப்பு 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது. மேலும் 1,000 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சினையும் வராது. நீங்கள் பழுதுபார்க்கவும் தேவையில்லை. அயோத்தியில் இருந்து நேபாளம் வரையிலான பகுதியில் நிலநடுக்கத்தின் தீவிரத்தை அளந்து அதற்கேற்ற வகையில் கோயிலின் அடித்தளத்தை வடிவமைத்து உள்ளனர்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆலோசனையின் பேரில், பொறியாளர்கள் 15 மீட்டர் தூரத்திற்கு மேல் பொருத்தமில்லாத மண்ணை அகற்றி விட்டு அதன் பிறகு அடித்தளத்தை அமைத்தனர். அஸ்திவாரத்திற்குப் பயன்படுத்தப்படும் மறுவடிவமைக்கப்பட்ட மண் 14 நாட்களுக்குள் கல்லாக திடப்படுத்தி 47 அடுக்குகளாக போடப்பட்டது.
கோயிலின் கட்டமைப்பு சிறப்பம்சங்கள்
ரூர்க்கியில் உள்ள சிஐஎஸ்ஆர்-சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிபிஆர்ஐ) இயக்குனர், இதுகுறித்து கூறுகையில் கோயிலின் கட்டுமானத்திற்கு கல்லை பயன்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது. இது மற்ற பொருட்களைக் காட்டிலும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடியது. இரும்பு போன்றவற்றை பயன்படுத்தினால் துருப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.
CBRI ஆல் கோயிலில் ஒரு தனித்துவமான நண்பகல் பிரதிபலிப்பு பொறிமுறை கட்டப்பட்டு உள்ளது. இந்த தனித்துவமான பொறிமுறையானது ராம நவமியின் போது மதிய நேரத்தில் சிலைகளின் நெற்றியில் சூரிய ஒளியை செலுத்துகிற அம்சத்தில் கட்டியுள்ளனர்.
இது பக்தர்களுக்கு ஒரு ஆன்மீக அனுபவத்தை கொடுக்கும். மேலும் ராமரின் அருளை சூரிய ஒளிச் சக்தியுடன் நீங்கள் பெறலாம். எனவே ராமர் கோயில் வெறும் ஆன்மீக சிந்தனையுடன் மட்டும் கட்டப்படவில்லை, அதற்கும் மேலாக பல அறிவியல் சிந்தனைகளுடனும் கண்டுபிடிப்புகளுடனும் சேர்த்து கட்டப்பட்டு உள்ளது.



Click it and Unblock the Notifications