Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
அயோத்தி ராமர் கோயில் குறித்து உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறதா? இதோ அதற்கான பதில்கள்!
Ayodhya Ram Mandir: அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது. அதிலும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நம் இந்து கலாச்சாரப்படி இந்த திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.
ஏனெனில் இதை சிமெண்ட் மற்றும் இரும்பு வைத்தெல்லாம் கட்டவில்லை. வெறும் கல்லைக் கொண்டு இந்த கோயிலை கட்டி வருகின்றனர். மேலும் இந்த கோயிலைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. மக்களுக்கு ராமர் கோயில் குறித்த நிறைய சந்தேகங்களும் இருக்கின்றது. எனவே அவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இங்கே பல பதில்கள் கொடுக்கப்பட்டு உள்ளன அதைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

அயோத்தி ராமர் கோவிலின் முக்கியத்துவம் என்ன?
அயோத்தி ராமர் கோயில் இந்துக்களின் புனித யாத்திரை தலமாக கருதப்படுகிறது. இது ராமர் பிறந்த இடம் என்பதால் இன்னும் கூடுதல் சிறப்பு பெற்று விளங்குகிறது.
அயோத்தி ராமர் கோயில் கட்ட எப்பொழுது அடிக்கல் நடப்பட்டது?
2020 ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நடப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதை யார் மேற்பார்வையிடுகிறார்கள்?
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதை சரியாக கவனிக்கும் வகையில் நிறைய குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. ராமர் கோயில் கட்டுவதை ஒரு அறக்கட்டளை கண்காணித்து வருகிறது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது இந்த வேலையை செய்து வருகிறது.
அயோத்தி ராமர் ஜென்மபூமியின் வரலாறு
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய பிறகு 2020 இல் ராமர் கோயில் கட்டத் தொடங்கப்பட்டது. 2019 இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு கோயில் கட்டுமானம் தொடங்கியது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் அயோத்தி கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?
நீங்கள் அயோத்தியை அடைந்த உடனேயே ராமர் கோயிலுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளன. இங்கு ஆட்டோ ரிக்ஷாக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து விவரங்கள் போன்றவை எளிதாக கிடைக்கின்றன. எனவே நீங்கள் அமைதியான ஒரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள நினைத்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வரலாம்.
அயோத்தி ராமர் கோயிலின் தரிசன நேரங்கள் என்ன?
ராமர் கோயில் ஜனவரி 23 முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது. தரிசன நேரம் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் பார்வையாளர்கள் ஆரத்தியில் பங்கேற்க முடியுமா?
ராமர் கோயிலில் ஆரத்தி நேரங்கள் மூன்று நேரங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. காலை 6:30 மணி, மதியம் 12:00 மணி மற்றும் இரவு 7:30 மணிக்கு என 3 நேரங்கள் ஆரத்தி நடைபெறும். இந்த ஆரத்திக்கான டிக்கெட்டுகளை நீங்கள் ஆன்லைனில் கூட பதிவு செய்யலாம். கோயில் அறக்கட்டளை வழியாகவும் நீங்கள் பாஸ் பெற முடியும். உங்கள் அடையாளச் சான்று இருந்தால் போதும் நீங்கள் பாஸ்களை பெற முடியும்.
அயோத்தி ராமர் கோயிலை வடிவமைத்தவர் யார்?
சந்திரகாந்த் சோம்புரா என்பவர் தான் ஸ்ரீ ராம் கோயிலின் முக்கிய கட்டிடக் கலைஞர் ஆவார். இவர் சோம்புரா கோயிலை சிறப்பாக கட்டி கொடுத்தவர். இவர் அகமதாபாத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 15 வது தலைமுறையாகும். அசல் வடிவமைப்பு 1988 இல் அகமதாபாத்தைச் சேர்ந்த சோம்புரா குடும்பத்தால் தான் வடிவமைக்கப்பட்டது. சோம்நாத் கோவில் உட்பட, குறைந்தது 15 தலைமுறைகளாக உலகளவில் 100க்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைப்பதில் சோம்புராக்கள் பங்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் பரம்பரை பரம்பரையாக கட்டிடக்கலை சிறப்பு பெற்ற கலைஞராக இருந்து வருகிறார்.
ராமர் கோயில் கட்டும் பொறுப்பு எந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது?
ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் இது குறித்து கூறுகையில், ராமர் கோயில் கட்டுமான திட்டம் குறித்து லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் 15 ஆண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. அதன் படி தான் தற்போது கோயில்கள் சிறப்பாக கட்டப்பட்டு வருகின்றன.
அயோத்தி ராமர் கோயிலின் சிறப்பு என்னென்ன?
அயோத்தி ராமர் கோயில் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டு வருகிறது. 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் என்ற கணக்கில் கட்டப்பட்டு வருகிறது. நாகரா கட்டிடக்கலை என்பது வட இந்தியாவில் தோன்றிய கோயில் கட்டிடக்கலை பாணியாகும்.



Click it and Unblock the Notifications