Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
யார் இந்த ஒளரங்கசீப்? ஏன் அவரின் கல்லறையை வைத்து இப்போது கலவரம் நடக்கிறது? அவர் செய்த காரியங்கள் என்ன தெரியுமா
தற்போது இந்தியாவில் பரவலாக பேசப்படும் ஒரு பெயர் ஒளரங்கசீப். ஒளரங்கசீப்பின் கல்லறையை மையமாக வைத்து வட இந்தியாவின் பல மாநிலங்களில் கலவரமும், பதற்றமான சூழலும் நிலவுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரை வைத்து இப்போதும் கலவரம் செய்வது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. யார் இந்த ஒளரங்கசீப்?
1658 முதல் 1707 வரை ஆட்சி செய்த சக்தி வாய்ந்த முகலாய அரசராக இருந்தார், முகலாயப் பேரரசு அவருடைய ஆட்சிக் காலத்தில் உச்சத்தை அடைந்தது. இருப்பினும், அவரது கொள்கைகள் முகாலயப் பேரரசின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டன. நவம்பர் 3, 1618 அன்று பேரரசர் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மஹாலின் மூன்றாவது மகனாக மால்வாவின் தோட் நகரில் பிறந்தார்.

ஒளரங்கசீப்பின் இளமைக்காலம்
அவர் தீவிர பக்தியுள்ள மற்றும் ஆக்ரோஷமான மனப்பான்மை கொண்ட இளைஞராக வளர்ந்தார், இஸ்லாமிய நெறிமுறைகளை மிகவும் தீவிரமாக கடைபிடித்தார். இராணுவம் மற்றும் நிர்வாகத்தில் அவரது ஆர்வம் இளமை பருவத்திலேயே தெளிவாகத் தெரிந்தது, இது ஷாஜகானின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசான அவரது மூத்த சகோதரர் தாரா ஷிகோவுடன் அரியணைக்கு போட்டிக்கு வழிவகுத்தது. 1636 முதல், ஔரங்கசீப் பல்வேறு கிளர்ச்சிகளை நடத்தி உஸ்பெக்குகள் மற்றும் பெர்சியர்களை வென்றார், மேலும் டெக்கனின் வைசிராயாகவும் இருந்தார்.
1657 இல் ஷாஜகானின் உடல்நலம் அரியணைக்கான வாரிசு நெருக்கடியைத் தூண்டியபோது, ஔரங்கசீப் தனது இராணுவத் தந்திரம், சூழ்ச்சிகள் மூலம் அரியணையைக் கைப்பற்ற முடிவு செய்தார். 1658 இல் சமுகாரில் தாரா ஷிகோவை தோற்கடித்த ஔரங்கசீப், அரியணையை கைப்பற்ற தனது தந்தையை ஆக்ராவில் சிறையில் அடைத்தார். ஔரங்கசீப் பற்றி பலரும் அறியாத உண்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அரியணைக்காக குடும்பத்தினரையேக் கொன்றார்
ஔரங்கசீப் அரியணை ஏற அவர்கள் குடும்பத்தினரையே பலி கொடுக்க வேண்டியிருந்தது. தனது மூத்த சகோதரர் தாரா ஷிகோவை அரியணைக்கு அச்சுறுத்தலாக நினைத்து அவரை தூக்கிலிட்டார். அவரது மற்றொரு சகோதரர் முராத்தையும் சிறையில் அடைத்து பின்னர் தூக்கிலிட்டார். ஔரங்கசீப் தனது மற்றொரு சகோதரர் ஷா ஷுஜாவையும் நாடுகடத்தி, இறுதியில் கொலை செய்தார். தனக்கு எதிராகக் கலகம் செய்த தனது மகன் முகமது அக்பரையும், அவரது மருமகன் சுலைமான் ஷிகோவையும் கொன்றார். பேரரசராக தனது அதிகாரத்தை பலப்படுத்த ஔரங்கசீப் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தார்.
கடுமையான வரிகளை மீண்டும் கொண்டு வந்தார்
மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தும் ஆட்சியாளர்கள் அனைத்து காலத்திலும் இருந்திருக்கிறார்கள். ஔரங்கசீப்பின் மதக் கொள்கைகள் மிகவும் பிளவுபடுத்தும் வகையில் இருந்தன. அக்பரால் ஒழிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரியை அவர் மீண்டும் அறிமுகப்படுத்தினார், மேலும் பழமைவாத இஸ்லாமிய நடைமுறைகளை அமல்படுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்து சமூக மக்களையும் கொதிப்படையச் செய்தது, மேலும் அவரது ஆட்சிக்கு எதிர்ப்பை அதிகரித்தன. சிலர் அவரை ஒரு பக்தியுள்ள முஸ்லிம் ஆட்சியாளராகக் கருதினாலும், மற்றவர்கள் அவரது கொள்கைகள் முகலாய அரசின் மத சகிப்புத்தன்மையை சிதைப்பதாக கருதினார்கள், இதனால் முகாலய அரசு மீது தவறான பார்வை உருவாகியது.
நேர்த்தியான எழுத்து கலைஞராக இருந்தார்
ஔரங்கசீப் கடுமையாக ஆட்சியாளராக இருந்தாலும், அவர் ஒரு திறமையான எழுத்து கலைஞராக இருந்தார், அவர் இஸ்லாமிய எழுத்தணிக்கலையின் அழகான படைப்புகளை உருவாக்கினார். அவர் தனது படைப்புகளை தீவிரமாக விற்று, அதன்மூலம் கிடைக்கும் நிதியை தனது எளிய வாழ்க்கை முறை மற்றும் மதக் கடமைகளை ஆதரிக்கப் பயன்படுத்தினார். இந்தக் கலையின் மீதான அவரது அர்ப்பணிப்பு அவரது ஆளுமையின் மென்மையான, கலை ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
எளிமையான கல்லறை
வழக்கமாக முகலாய அரசர்கள் தங்கள் இறப்புக்குப் பின் ஆடம்பரமான கல்லறைகள் அமைப்பதையே விரும்பினார், மாறாக ஒளரங்கசீப் மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் ஒரு எளிமையான அடக்கத்தைத் தேர்ந்தெடுத்தார், இது அவரது கடுமையான மத நம்பிக்கைகளின் வெளிப்பாடாகும். மற்ற முகலாய ஆட்சியாளர்களின் விரிவான கல்லறைகளைப் போலல்லாமல், அவரது கல்லறை குறைந்தபட்ச செலவில் கட்டப்பட்ட ஒரு எளிய மற்றும் திறந்த அமைப்பாகும். இது இஸ்லாமிய விழுமியங்களை அவர் ஆழமாகப் பின்பற்றுவதையும், மரணத்தில் கூட அதிகப்படியான ஆடம்பரங்களை அவர் வெறுப்பதையும் காட்டியது.
சீக்கியர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்கள் செய்த கிளர்ச்சி
1675 ஆம் ஆண்டு ஒளரங்கசீப் குரு தேக் பகதூரை தூக்கிலிட்டது சீக்கிய சமூகத்தை மிகவும் கோபப்படுத்தியது, இது குரு கோபிந்த் சிங்கின் தலைமையில் ஒரு கடுமையான கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது முகலாய ஆட்சி மற்றும் ஒடுக்குமுறையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கல்சா இயக்கத்தின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தது. இதேபோல், கோகுலா மற்றும் பின்னர் ராஜா ராம் போன்ற பிரமுகர்களால் வழிநடத்தப்பட்ட ஜாட் இனத்தவர்கள், ஒளரங்கசீப்பின் கடுமையான வரிவிதிப்பு மற்றும் மத துன்புறுத்தல் உள்ளிட்ட கொள்கைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












