இந்தியாவில் இதுக்கு முன்னாடி நடந்த தேர்தல்கள் பற்றிய சுவாரஸ்யமான 'இந்த' விஷயங்கள கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்!

மதச்சார்பற்ற, ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கு எல்லா மக்களும் சமம், எம்மதமும் சமம் என்ற கருத்துக்களை மக்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு வழங்கிய அடிப்படை ஓட்டு உரிமையின் மூலம் தங்களை ஆளும் பிரதிநிதிகளை தேர்தெடுக்கிறார்கள்.

இந்திய நாடாளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. இந்த நாட்டில், 'இந்திய மக்களாகிய நாம்' நமக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி பிரதிநிதிகளை தேர்தெடுக்கிறோம்.

Assembly Elections Result 2023: 12 Interesting Facts About Election In India In Tamil

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிக்க முடியாத அடிப்படை அம்சங்களில் ஒன்று ஜனநாயகம். 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேங்களை கொண்டுள்ள இந்தியாவில், ஜனநாயக முறைப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு கணக்கின்படி 71.4 கோடி பேர் இந்தியாவில் வாக்குரிமை பெற்றிருந்தனர்.

நான்கு மாநில தேர்தல்

இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவில் யூனியன் மற்றும் மாநில தேர்தல் செயல்முறைகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பான ஒரு தன்னாட்சி அரசியலமைப்பு அதிகாரமாகும். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள மக்களவை, ராஜ்யசபா மற்றும் மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை நிர்வகிக்கிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கான ஆகிய 4 மாநிலங்களில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடந்த உலகின் மிகப்பெரிய தேர்தல் பற்றிய 12 சுவாரஸ்யமான உண்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

  1. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு முதல்முறையாக 1951ஆம் ஆண்டு பொதுத் தோர்தல் நடத்தப்பட்டது. அக்டோபர் 25, 1951 இல் தொடங்கிய தேர்தல், பிப்ரவரி 21, 1952 வரை தொடர்ந்து நடைபெற்றது.
  2. 1989 ஆம் ஆண்டில், 61வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தின்படி, வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 ஆகக் குறைத்தது.
  3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) முதன்முறையாக 1982 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
  4. யாருக்கும் வாக்களிக்க விரும்மில்லை என்ற நோட்டா(NOTA) சின்னம் அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனால் வடிவமைக்கப்பட்டது.
  5. 2014 இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் NOTA சின்னம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நோட்டா சின்னம் 1.1% வாக்குகளைப் பெற்றது, இது 6 மில்லியனுக்கும் அதிகமாகும்.
  6. மக்களவைத் தேர்தலுக்கான செலவை இந்திய அரசு ஏற்கிறது. ஆனால், தேர்தல் பார்வையாளர்களுக்கான கவுரவ ஊதியம், தேர்தல் கமிஷன் மூலம் வழங்கப்படுகிறது.
  7. 1952 இல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலுக்கு சுமார் ரூ.104.5 மில்லியன் செலவானது, 2014 பொதுத் தேர்தல்களுக்கு கிட்டத்தட்ட ரூ.38.7 பில்லியன் (ரூ.3,870.3 கோடி) செலவானதாகக் கூறப்படுகிறது.
  8. சட்டமன்றத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும்போது, அதற்கான செலவை 50:50 என்ற அடிப்படையில் மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்கின்றன.
  9. 25 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியக் குடிமகன் முதலமைச்சராக முடியும், அவர் மாநில அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார் மற்றும் துணை முதல்வரால் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம்.
  10. இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக பணியாற்றியவர் சரோஜினி நாயுடு. அவர் 1947 ஆகஸ்ட் 15 முதல் 1949 மார்ச் 2 வரை உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்தார்.
  11. 1963 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 16 பெண் முதலமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதலைமைச்சராக பதவியேற்ற முதல் பெண் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசேதா கிருபளானி ஆவார், அவர் அக்டோபர் 2, 1963 அன்று உத்தரபிரதேச முதலைமைச்சராக பதவியேற்றார்.
  12. இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 15இன் படி, மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் எல்லா மக்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பிறப்பால் அனைவரும் சமம் என்கிறது.

Story first published: Sunday, December 3, 2023, 13:50 [IST]
Desktop Bottom Promotion