Latest Updates
-
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன?
2 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை நண்பர்களுக்கு பரிசாக கொடுத்த ஆனந்த் அம்பானி... எந்தெந்த நடிகர்களுக்கு தெரியுமா?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் ஏ. மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் அவர்களின் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையின் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நூற்றாண்டின் பிரம்மாண்டமான திருமணம் என்று கூட இதனை சொல்லலாம்.
உலகமே திரும்பி பார்க்கும் வண்ணம் நடந்த இந்த திருமணம் அதன் பிரமாண்டத்திற்காக மட்டுமல்லாமல், ஆனந்தின் நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கப்பட்ட ஆடம்பரமான பரிசுகளுக்காகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆனந்த் அம்பானி தனது நெருங்கிய நண்பர்களுக்கு தலா ₹2 கோடி மதிப்பிலான பிரத்யேக ஆடம்பர கடிகாரங்களை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. ராயல் ஓக் பெர்பெச்சுவல் கேலெண்டர் லுமினரி எடிஷன்( Royal Oak Perpetual Calendar Luminary Edition) எனப்படும் 25 லிமிடெட் எடிசன் ஆடெமர்ஸ் பிக்யூட் கடிகாரத்தின் பெஸ்போக் சீரிஸை ஆனந்த் வாங்கியதாக கூறப்பட்டது. இந்த கடிகாரம் ஷாருக் கான், ரன்வீர் சிங், விக்கி கவுசல், ஷிகர் பஹாரியா, வீர் பஹாரியா மற்றும் மீசான் ஜாஃப்ரி போன்ற பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது.
18k ரோஸ் கோல்டு மார்வெல் என வர்ணிக்கப்படும், ராயல் ஓக் பெர்பெச்சுவல் கேலெண்டர் லுமினரி எடிஷன், கருப்பு சப்-டயல்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான றோஸ் கோல்டு டயலைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பெஸ்போக் பரிசுகளின் மொத்த மதிப்பு ₹50 கோடியைத் தாண்டியது.
ரன்பீர் கபூர், ஆலியா பட், கிர்த்தி சனோன், தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர், ஷனாயா கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், தென்னிந்தியாவை சேர்ந்த சூர்யா-ஜோதிகா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்ந், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் தொகுப்பால் இந்த திருமணம் ஒரு நட்சத்திர கலைவிழா போல இருந்தது. விவகாரம் ஒரு நட்சத்திரக் காட்சியாக இருந்தது. மேலும் ஜான்வி கபூர், வருண் தவான், சாரா அலி கான், அனன்யா பாண்டே, ரேகா ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் நிக் ஜோனாஸ் மற்றும் ஜான் சீனா போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமையன்று, புதுமணத் தம்பதிகள் சுப் ஆஷிர்வாத் விழாவை நடத்தினர், இதில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வாட்சை பெற்ற அனைவரும் தங்கள் புத்தம் புதிய வாட்ச்களுடன் போஸ் கொடுக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, 300Kக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. "Beautiful" என்று ஒரு Instagram பயனர் எழுதினார். "அவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் நடனமாடுவதில் ஆச்சரியமில்லை.." என்று மற்றொருவர் கேலியாக கமெண்ட் செய்திருந்தார்.



Click it and Unblock the Notifications

