Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
அம்பானியின் வீட்டில் உள்ள தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாட்டின் பணக்கார குடும்பமான அம்பானியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று உங்கள் கண்களை கலங்க வைக்கும் அம்பானியின் இல்லமான ஆண்டிலியா கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
மும்பையில் உள்ள அம்பானியின் வீடான ஆண்டிலியா சுமார் 4,00,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 600 பேர் கொண்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில் வீட்டின் கோவிலுக்கு அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணியான மும்பை இந்தியன் இதுவரை அதிக சீசன் கோப்பைகளை வென்றுள்ள அம்பானியின் அணி என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்... கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும் போதெல்லாம், அதனை நீத்தா அம்பானி அண்டிலியாவில் உள்ள கோவிலில் கடவுளின் காலடியில் வைத்து வணங்குவார்...
ஊடக அறிக்கையின்படி, அண்டிலியாவில் உள்ள கோவிலில், சிலைகள் முதல் கதவுகள் மற்றும் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியால் மட்டுமே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன், கடவுள் சிலைகளிலும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
ஆண்டிலியா உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். அம்பானி குடும்பத்திற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பெரும்பாலும் இந்த முழு குடும்பமும் பூஜை, யாகம் மற்றும் ஹவனம் போன்ற சடங்குகளை எந்த ஒரு நல்ல வேலையையும் செய்வதற்கு முன் செய்துவிடுவார்கள்..
இதனுடன், பல்வேறு மதங்கள் தொடர்பான விலையுயர்ந்த சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டில் ஒரு இடமும் உள்ளது. நீத்தா அம்பானி அடிக்கடி இங்கு நேரத்தை செலவிடுவது அவருக்கு அமைதியை அளிக்கிறது.
'ஆண்டிலியா' சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் 'பெர்கின்ஸ்' என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ஆஸ்திரேலிய கட்டுமான நிறுவனமான 'லாக்டன் ஹோல்டிங்' என்பவரால் கட்டப்பட்டது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஆன்டிலியா, 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்ச்சியையும் தாங்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், முகேஷ் மற்றும் நீத்தா அம்பானி இருவரும் தங்கள் வீட்டைக் கட்டும் போது வீட்டின் கோயில் பட்ஜெட்டில் பெரும் பகுதியை செலவழித்துள்ளனர். அதற்கு காரணம் நீத்தா அம்பானி அதிகமாக கடவுள் நம்பிக்கைக் கொண்டவராம்..
இந்நிலையில் உண்மையில், நீத்தா அம்பானிக்கு அரியவகை வைரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது கோவிலை சிறப்பிக்கும் வகையில் விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் திருமணம் நடந்து முடிந்தது..



Click it and Unblock the Notifications