Latest Updates
-
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க
akshaya tritiya: அட்சய திருதியை நாளில் உங்கள் ராசிப்படி இவற்றை வாங்குங்கள்.. அற்புதமான பலன்கள் கிடைக்கும்...!
இந்து பஞ்சாங்கத்தின் படி, அக்ஷய திரிதியை பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியான நாளை வெள்ளிக்கிழமை வருகிறது.. காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். இது தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு சாதகமாக கருதப்படுகிறது. நல்ல செயல்களைச் செய்வதற்கு இன்றைய நாள் மிகவும் உகந்தது என்றும் நம்பப்படுகிறது. பலர் அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது என்பது வழக்கம். மேலும் இந்த நன்னாளில் புதிய வேலைகள் தொடங்கவும் சுபகாரியங்கள் மற்றும் புதிய தொழில்கள் தொடங்கவும் செய்வார்கள்...
இதற்கிடையில்.. ஜோதிட சாஸ்திரப்படி, அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன. மேலும் இன்று அன்னதானம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் இன்றைய நாளில் எந்த ராசியினர் என்ன பொருட்களை வாங்க வேண்டும்? என்பது குறித்து 12 ராசியினருக்குமான விளக்கத்தை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

மேஷம்
இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று சிவப்பு நிற பொருட்கள் அல்லது சிவப்பு நிற ஆடைகளை வாங்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெறலாம்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று சிறுதானியம் அல்லது அரிசி வாங்க வேண்டும். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் புதிய ஆடைகள் வாங்க வேண்டும். மேலும் புதிய கொத்தமல்லி வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்
இந்த ராசியின் அதிபதி சந்திரன் என்பதால்.. கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் அரிசி அல்லது பால் வாங்க வேண்டும். இப்படிச் செய்தால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இந்த ராசிக்கு சூரியன் ஆதிக்கம் செலுத்துவதால்.. சிம்ம ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று செப்பு பாத்திரங்கள் அல்லது சிவப்பு நிற பொருட்களை வாங்க வேண்டும். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
கன்னி
இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று பருப்பு மற்றும் பருப்பு வகைகளை வாங்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம்.
துலாம்
இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று அரிசி அல்லது சர்க்கரை வாங்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் வெல்லம் அல்லது சுத்தமான குடிநீரை வாங்க வேண்டும். இப்படிச் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
தனுசு
குரு இந்த ராசிக்கு அதிபதி என்பதால்.. தனுசு ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் வாழைப்பழம் அல்லது மஞ்சள் நிற அரிசியை வாங்க வேண்டும். இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்
இந்த ராசிக்கு அதிபதி சனிபகவான் இருப்பதால்.. மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் பருப்பு வகைகளை வாங்க வேண்டும். இதைச் செய்வது உங்களுக்கு நல்லது.
கும்பம்
இந்த ராசியின் அதிபதி சனி என்பதால்.. கும்ப ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் கருப்பு எள் அல்லது கருப்பு நிற ஆடைகளை வாங்க வேண்டும்.
மீனம்
இந்த ராசிக்கு குருவின் ஆட்சி இருப்பதால்.. இந்த ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் சுத்தமான மஞ்சளை வாங்குவது நல்ல பலனைத் தரும்.



Click it and Unblock the Notifications
