Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
அட்சய திருதியை 2024: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
அட்சய என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை' திருநாளாகக் கொண்டாடுகின்றோம். இந்த வருடம் மே 10ஆம் தேதி அக்ஷய திருதியை வரவுள்ளது. அதாவது சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. இன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் மக்கள் அன்று தங்கம் வாங்க நகக்கடைகளில் அதிகமாக குவிவார்கள்..
மேலும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால் தங்க நகைகளை வாங்கும் போது நாம் அனைவருமே சில பொதுவான தவறுகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த சிறிய தவறு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் தங்க நகைகளை வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய சிலவற்றை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தூய்மையான தங்கம்
தங்கத்தின் தூய்மை குறித்து எப்போதும் சில குழப்பங்கள் நிலவுகிறது. வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதும் இங்குதான். பெரும்பாலான தங்க நகைகள் 22 காரட்களில் கிடைக்கின்றன. 18 காரட் நகைகளை வாங்குபவர்களும் உள்ளனர். ஆனால் பல கடைகளில் 24 காரட் நகைகள் விற்கப்படுகின்றன. 24 காரட் தங்கக் காசுகள் மற்றும் தங்கக் கட்டிகளாக மட்டுமே கிடைக்கும். நகைகளாக வேண்டும் என்றால் 22 காரட் அல்லது 18 காரடில் மட்டுமே கிடைக்கும். காரணம் 24 காரட் தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது. அதனால்தான் தங்க நகைகளை செய்ய வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்த 14 காரட், 18 காரட், மற்றும் 22 காரட் தங்கம் பயன்படுத்துகிறது. 22 காரட் நகைகள் 916 நகைகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹால்மார்க்
புதிய ஹால்மார்க் விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. நகைகளில் ஹால்மார்க் கொண்ட ஹால்மார்க் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் (HUID) கட்டாயம். நகைகள் முக்கோண BIS ஹால்மார்க், 22K முத்திரை மற்றும் ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த குறியீடு இருந்தால், அந்த நகைகளின் விவரங்களை பிஐஎஸ் செயலியில் கண்காணிக்க முடியும். அதானால் பாதுகாப்பாக இருக்க, ஹால்மார்க் தங்க நகைகளை வாங்குவது நல்லது. ஹால்மார்க் சான்றிதழ் பெற்றிருந்தால் அது தூய்மை தங்கமாகும். ஹால்மார்க் நகையில் அந்தக் கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையைச் சேர்ந்ததுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.
தங்கம் செய்வதற்கான செய்கூலி
கட்டணம் செலுத்துவதிலும் மோசடிகள் நடக்கின்றன. நகைகள் செய்வதற்கு வழங்கப்படும் கூலி மேக்கிங் கட்டணம் எனப்படும். மேக்கிங் கட்டணங்கள் ஊதியம் என்றும் அழைக்கப்படுகின்றன. வழக்கமாக நகையின் வெயிட்டை பொறுத்து மேக்கிங் கட்டணம் 3 முதல் 25 சதவீதம் வரை இருக்கும். கட்டணம் மற்றும் ஊதியம் வேறு இல்லை. தங்க நகை தயாரிக்கும் போது ஏற்படும் செய்கூலி மற்றும் சேதாரங்கள் நகையின் விலையுடன் சேர்க்கப்படுகின்றன. அந்த நகைகளின் செய்கூலி அந்த குறிப்பிட்ட நகையில் உள்ள டிசைகள் மற்றும் அவை இயந்திரத்தால் செய்யப்பட்டவையா அல்லது கைகளால் செய்யப்பட்டவையா என்பதைப் பொருத்தே அமையும். மனிதனால் தயாரிக்கப்பட்ட நகைகளை விட மெஷினில் செய்யப்பட்ட நகைகள் விலை குறைவானதாக இருக்கும். எனவே அதை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
சேதாரம்
மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளும் சில விரயங்களைக் கொண்டுள்ளது. அதே போல நகைகள். உருகுவது, வெட்டுவது, நகைகள் செய்வது போன்ற செயல்களில் சிறிதளவு தங்கம் வீணாகிறது. இது விரயம் எனப்படும். இந்த விரயத்தை வாடிக்கையாளரே ஏற்க வேண்டும். இந்த கட்டணங்கள் 5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும்.
தங்கத்தின் விலை
அட்சய திருதியையாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாளாக இருந்தாலும் சரி, நகைகளை வாங்க வெளியில் செல்லும் முன் அன்றைய தங்கத்தின் விலையை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் சர்வதேச சந்தையைப் பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினமும் மாறுகிறது. நீங்கள் விகிதத்தை நன்கு அறிந்திருந்தால், விலையில் ஏமாற்றப்பட மாட்டீர்கள். மேலும் இந்தியாவில் பெரும்பாலான தங்க நகைகள் எடை போட்டு விற்பனை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் அதிக எடை உள்ள நகைகள் விலை அதிகமாக கணிக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் மரகதங்களைப் போன்ற விலையுயர்ந்த கற்கள் பெரும்பாலும் தங்க நகைகளில் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை அதிக எடையை காட்டும். எனவே நீங்கள் கற்கள் உள்ள நகைகளை வாங்கும் போது, அவற்றை நீக்கினால எவ்வளவு எடை வருமோ அதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இதனை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் தங்கம் வாங்கும்போது கவனிக்க தவறி விடுகிறோம்.
பில் கட்டாயம்
ஒரு கிராம் தங்கப் பொருளை வாங்கினாலும் பில் கட்டாயம் வாங்க வேண்டும். அது அசல் பில்லாக இருக்க வேண்டும். நகை வாங்கும் போது ஒரிஜினல் பில் வாங்க வேண்டும். தங்கத்தின் தூய்மை, மேக்கிங் சார்ஜ், விரயம், கற்களின் எடை, கற்களின் விலை போன்ற அனைத்து விவரங்களும் பில்லில் குறிப்பிடப்பட்டிருக்க இருக்க வேண்டும். அசல் பில் இருந்தால், தங்கத்தின் தூய்மை குறித்து சந்தேகம் ஏற்படும் போது அதை கடுமையாக நிராகரிக்கலாம். தேவைப்பட்டால் புகார் கூட அளிக்கலாம்.



Click it and Unblock the Notifications











