Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
500 ஆண்டுகளுக்கு பின் டிசம்பர் 16 முதல் இந்த 3 ராசிகளில் உருவாகும் 4 ராஜயோகம்.. பண மழை கொட்டப்போகுது..
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே தனுசு ராசியில் புதன் பயணித்து வருகிறார். இதனால் தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

மேலும் சூரியனின் இந்த ராசி மாற்றத்திற்கு பின், மேஷ ராசியில் இருக்கும் குரு பகவானின் ஒன்பதாவது பார்வை சூரியனின் மீது விழுவதால் ராஜலக்ன ராஜயோகம் உருவாகிறது. அதே வேளையில் செவ்வாய் தனது சொந்த ராசியில் நுழைந்து சுப யோகத்தை உருவாக்குகிறார் மற்றும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் மாளவ்ய ராஜயோகத்தை உருவாகுகிறார்.
இப்படி உருவாகும் 4 ராஜயோகங்கள் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாவதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 4 ராஜயோகத்தால் செல்வம் அதிகரிக்கும். சூரியனின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 4 ராஜயோகங்களானது சமூகத்தில் மதிப்பையும், மரியாதையையும் தரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலர் வருமான உயர்வைப் பெறலாம். இது தவிர புதிய வேலை வாய்ப்புக்களும் தேடி வரும். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளை தருவதாக இருக்கும். கூலி வேலை செய்பவர்கள் தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும். முதலீடுகளை செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 4 ராஜயோகங்களால நல்ல காலம் தொடங்குகிறது என்றே கூறலாம். அதுவும் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த முடிவுகளை வேலையில் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிதி நிலையில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications