Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
ஆடி மாதத்திற்கு பின் உள்ள சொல்லப்படாத அறிவியல் உண்மைகளும்.. ஆச்சரியங்களும்..
Aadi 2023: ஆடி மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஆடிப்பெருக்கு மட்டும் தான். ஆனால் ஆடி மாதத்தில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என வரிசையாக நிறைய தினங்கள் கொண்டாடப்படுகிறது. நிறைய சுபதினங்கள் வந்தால் கூட இந்த ஆடி மாதத்தில் யாரும் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.
திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளை இந்த மாதத்தில் வைப்பதில்லை. புதுமணத் தம்பதிகளையும் இந்த மாதத்தில் பிரித்து வைப்பதுண்டு. பஞ்சாங்கம் மற்றும் பாரம்பரிய ரீதியாக இப்படி செய்தால் கூட இதற்கு பின்னால் சில அறிவியல் உண்மைகளும் ஒளிந்து இருக்கத் தான் செய்கிறது. அதைப் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

ஆடி மாதம் பருவமழை தொடங்கும் காலம்
ஆடி மாதத்தில் தான் பருவ மழையானது தொடங்குகிறது. இதனால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த தண்ணீர் தான் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களை செழிக்க வைக்க ஓடி வரும் ஆடி நீர்ப்பெருக்கை வணங்கி விவசாயிகள் வரவேற்பார்கள்.
டெல்டா பகுதிகளில் ஆறுகளை வணங்கி வழிபடுவார்கள். இந்த ஆடிப் பெருக்கு திருவிழாவின் போது புதுமணத் தம்பதிகள் புதிய மஞ்சள் கயிறுகளை மாற்றிக் கொள்வார்கள். ஆடி மாதத்தில் தான் விதைகளை விதைப்பார்கள். ஏனெனில் ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரால் பயிர்கள் செழித்து வளரும். அறுவடையின் நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆடி மாதத்தில் ஏன் சுபநிகழ்ச்சிகள் கூடாது
இந்து ஜோதிடத்தின் படி, ஆடி மாதம் ஒரு அசுபமான மாதமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் திருமணம், சுப நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா என எந்த சுப காரியங்களும் நடக்காது. இந்த ஆடி மாதத்தை ஒரு சூன்ய மாதம் என்றும் கூறுகின்றனர்.
அறிவியல் உண்மை : ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்குவதால் இந்த மாதத்தில் சுப காரியங்கள் வைப்பது பெரும் சிரமத்தை உண்டாக்கும். அதனால் தான் சுப காரிய விஷயங்கள் இந்த மாதத்தில் தள்ளிப் போடப்படுகிறது.
ஆடி மாதத்தில் ஏன் கணவன் மனைவி பிரிந்திருக்க வேண்டும்?
ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆடி மாதத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பிரிந்திருக்க வேண்டும். இந்த மாதத்தில் மனைவியை அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இந்த சடங்கு முறை ஆடி மாதத்தில் பின்பற்றப்படுகிறது. ஆடி மாதம் முடிந்த பிறகு தான் கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்து ஜோதிடத்தின் படி இந்த சடங்கு முறை பின்பற்றப்படுகிறது.
அறிவியல் உண்மை : ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை என்னவென்றால் கிரிகோரியன் காலண்டர் படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் ஆடி மாதம் வரும். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் ஜூன் மாதம் தொடர்பு கொண்டால் குழந்தை பிறப்பானது சித்திரையில் அதாவது வெப்பமான கோடை காலத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கோடை காலத்தில் பிறந்த குழந்தைக்கு உடல்நலப் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது என்பதால் ஆடி மாதத்தில் கணவன் மனைவி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.
சமூக பொருளாதாரம் : ஆடி மாதத்தில் தான் பருவ மழையே தொடங்குகிறது. எனவே மழைக்காலம் ஆரம்பித்த பிறகு தான் விவசாய நிலங்களில் விதைப்பானது தொடங்குகிறது. எனவே ஆடி மாதத்திற்கு பிறகு தான் விவசாயம் மேம்பட்டு சமூக பொருளாதாரமும் உயரும். எனவே தான் இந்த மாதிரியான சமயங்களில் சுப நிகழ்ச்சிகளும் குழந்தை பிறப்பும் தள்ளிப் போடப்படுகிறது.
ஆடி மாதத்தில் பெண்கள் ஏன் மெஹந்தி போடுகின்றனர்?
இந்தியாவின் பல இடங்களில் ஆடி மாதத்தில் மெஹந்தி இடும் வழக்கம் உள்ளது. அழகான மெஹந்தி டிசைன்களை உள்ளங்கைகளில் போட்டு காட்டுவது உண்டு.
அறிவியல் உண்மை : ஆடி மாதம் பருவமழைக்காலம் என்பதால் காலநிலை மாற்றத்தில் இருந்து விடுபட மெஹந்தி போடுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மழைக்காலத்தில் சரும தொற்றுகள் அதிகம் பரவும் என்பதால் மருதாணியை கொண்டு மெஹந்தி போடும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். இதனால் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆடி மாதம் பூஜை மற்றும் விரதத்திற்கு உகந்தது
ஆடி மாதத்தை ஒரு சூன்ய மாதமாக பார்த்தாலும் இந்த மாதத்தில் ஏராளமான பூஜை மற்றும் விரதம் மேற்கொள்ளப்படுகிறது. பூரி ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரையும் மற்றும் பந்தர்பூர் விட்டலா கோவிலில் பால்கி யாத்திரையும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
சதுர்மாஸ் விரதமும் இம்மாதத்தில் தான் தொடங்குகிறது. இந்த மாதத்தில் சக்தி தேவிகளையும், பைரவர், வராஹி நரசிம்மர், மகிஷாசுர மர்த்தினி, துர்க்கை அம்மன் போன்றோர்களை பக்தர்கள் மறக்காமல் வழிபடுகின்றனர். எனவே ஆடி மாதத்தில் நிறைய சிறப்பம்சங்களும் அதே நேரத்தில் அறிவியல் பூர்வமாக சில அசுப அம்சங்களும் இருக்கத் தான் செய்கிறது.



Click it and Unblock the Notifications
