Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
700 ஆண்டுகளுக்கு பின் ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் 5 யோகங்கள்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!
5 Yogas Form On Raksha Bandhan After 700 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது.
அந்த வகையில் அண்ணன்-தங்கை உறவைக் கொண்டாடும் வகையில் வடஇந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ரக்ஷா பந்தன். இது என்ன தான் வடஇந்திய பண்டிகையாக இருந்தாலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தங்கைகள் தங்கள் அண்ணன்மார்களுக்கு ராக்கி என்னும் கயிற்றினை கட்டுவார்கள். அப்படிப்பட்ட ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வருகிறது. இந்த ரக்ஷா பந்தன் நாளில் 5 மகா யோகங்கள் உருவாகவுள்ளன.

இந்த யோகங்களானது 700 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக உருவாகின்றன. அந்த யோகங்களாவன புதாதித்ய யோகம், சாஷ் யோகம், வஸ்ரபதி யோகம், கஜகேசரி யோகம், பிருத்விதா யோகம் ஆகியவை ஆகும்.
இந்த 5 யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்களானது திடீர் பண வரவைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் அந்த பயணம் நல்ல பண ஆதாயத்தைத் தருவதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்களால் திடீர் பணம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இக்காலத்தில் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள் மற்றும் மற்றவர்கள் உங்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனால் மிகுந்த ஆற்றல்மிக்கவராக திகழ்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்களானது பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளை செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
