Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
3500 வருட பழமையான நாகரிகம் ராஜஸ்தானில் கிடைத்துள்ளது... இங்கு கிடைத்த அதிசய பொருட்கள் என்ன தெரியுமா?
இந்தியாவின் வரலாறு என்பது உலகின் மிகவும் தொன்மை வாய்ந்த நாகரிகங்களில் ஒன்றாகும். இந்தியாவின் வரலாற்றை தெரிந்து கொள்ள சுதந்திரத்திற்கு முன்னால் இருந்தே ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆய்விலும் கிடைக்கும் தகவல்களும், ஆதாரங்களும் இந்தியாவின் வரலாறு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நிரூபித்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள பஹாஜ் கிராமத்தில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்திற்கான ஆதாரங்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) கண்டுபிடித்துள்ளது.

அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள்
ஜனவரி 10, 2024 அன்று தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராண சரஸ்வதி நதியுடன் இணைக்கும் 23 மீட்டர் ஆழமுள்ள பேலியோ-சேனல் உட்பட பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பண்டைய நதி அமைப்பு ஆரம்பகால மனித குடியேற்றங்களுக்கு வழிவகுத்திருக்கலாம் மற்றும் பஹாஜை பண்டைய இந்தியாவின் பெரிய சரஸ்வதி படுகை கலாச்சாரத்துடன் இணைத்திருக்கலாம். இந்த அகழ்வாராய்ச்சியில் மண்பாண்டங்கள், பிராமி எழுத்துக்களின் பழமையான முத்திரைகள், செப்பு நாணயங்கள், யக்ஞ குண்ட், மௌரிய கால சிற்பங்கள், சிவன் மற்றும் பார்வதி சிலைகள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆழமான அகழ்வாராய்ச்சி
இந்த அகழ்வாராய்ச்சி, ஹரப்பா நாகரிகத்திற்குப் பிந்தைய காலம், மகாபாரத காலம், மௌரிய காலம், குஷாண காலம் மற்றும் குப்தர் காலம் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு காலகட்டங்களின் சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பிரஜ் பகுதி மத, கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தின் மையமாக இருந்ததாகக் கூறுகின்றன.
பஹாஜ் கிராமத்தில் நடந்த இந்த அகழ்வாராய்ச்சி சுமார் 23 மீட்டர் ஆழத்தை எட்டியது, இது ராஜஸ்தானில் இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராச்சிகளிலேயே மிகவும் ஆழமானதாகும்.
நிபுணர்களின் கருத்து
இந்த அகழ்வாராய்ச்சி தள மேற்பார்வையாளர் பவன் சரஸ்வத் அளித்த பேட்டியில் 'இந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு பழங்கால நதியின் கால்வாய் அல்லது பேலியோ கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார், இது ரிக்வேதத்தின் சரஸ்வதி நதியுடன் தொடர்புடையதாகி இருக்காலம். இந்த நீர் அமைப்பு ஆரம்பகால மனித குடியேற்றங்களை ஆதரித்திருக்கலாம், இது சரஸ்வதி பள்ளத்தாக்கை மதுரா மற்றும் பிரஜ் பகுதிகளுடன் இணைக்கிறது.
இந்த ஆய்வை நடத்திய குழுவின் அறிக்கையின் படி, அகழ்வாராய்ச்சியில் மட்பாண்டங்கள் மற்றும் ஹவன் குண்ட்கள் இருந்தன, அவை செவ்வக மற்றும் வட்ட ஓவியங்கள் மற்றும் பழங்கால நெருப்பு சடங்குகளின் எச்சங்களைக் கொண்டிருந்தன. மஹாபாரத கால ஆடைகள் மற்றும் பாத்திரங்களின் விளக்கங்களுடன் மட்பாண்டங்கள் பொருந்துகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கி.மு 400 ஆம் ஆண்டுக்கு முந்தைய சிலை இந்த இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இது மௌரியகளின் அன்னை தெய்வத்தின் தலை எனவும் நம்பப்படுகிறது. மேலும் குப்தர் கட்டிடக்கலை பாணியில் மண் சுவர்கள் மற்றும் தூண்கள் கிடைத்திருப்பதோடு உலோகவியல் தொடர்பான உலைகளும் கிடைத்திருப்பதால், அது செம்பு மற்றும் இரும்பு மூலப்பொருட்களின் பயன்பாடு இருந்திருப்பதை குறிக்கிறது. எலும்புகளால் செய்யப்பட்ட ஊசிகள், சீப்புகள் மற்றும் அச்சுகள் உள்ளிட்ட கருவிகள் இந்தியாவில் முதல் முறையாக இந்த வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த அகழ்வாராய்ச்சிகளில் காணப்படும் பிற சான்றுகளில் சக்தி மற்றும் பக்தி மரபுகளுடன் தொடர்புடைய சிவன் மற்றும் பார்வதியின் டெரகோட்டா சிலைகளும் கிடைத்துள்ளது. அந்தக் காலத்தின் வர்த்தகம் மற்றும் அழகு மரபுகளை பிரதிபலிக்கும் சங்கு வளையல்கள் மற்றும் விலைமதிப்பற்ற கல் மணிகள் போன்றவையும் கிடைத்துள்ளன.
இது தவிர, அகழ்வாராய்ச்சியின் போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது இஸ்ரேலுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications












