Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
300 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ள இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்புள்ள புதையல்...!
இந்தியாவின் வரலாறு என்பது மிகவும் தனித்துவமானது. இந்தியா கடந்த காலங்களில் உலகின் மிகவும் பணக்கார நாடாக இருந்தது. இந்தியாவிற்கு அந்நிய படையெடுப்புகளும், ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன் இந்தியா உலகிலேயே அதிக சொத்துக்களை கொண்ட நாடாக இருந்தது. ஒவ்வொரு படையெடுப்பின் போதும் விலை மதிப்பில்லாத செல்வங்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் மட்டுமே பல ட்ரில்லியன் மதிப்புள்ள இந்திய சொத்துக்களை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலுக்குள் 300 ஆண்டுகள் பழமையான ஒரு கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளனர், அந்த உடைந்த கப்பலில் 101 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொக்கிஷங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. ஊடக அறிக்கைகளின் படி, நோசா சென்ஹோரா டோ காபோ என்ற இந்த போர்த்துகீசிய கப்பல் 1721 ஆம் ஆண்டு மடகாஸ்கருக்கு அருகே கடற்கொள்ளையர்கள் நடத்திய மோசமான தாக்குதலில் மூழ்கியது.

இந்தியாவின் பொக்கிஷங்கள்
அந்த கப்பல் கோவாவிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் கோவா போர்ச்சுகலால் ஆளப்பட்டது. எனவே இந்த கப்பலில் எடுத்து செல்லப்பட்ட பொக்கிஷங்கள் இந்தியாவை சேர்ந்ததாக இருக்கும். பிரிட்டிஷ் ஊடகங்களின் படி, இந்த புதையல் நிறைந்த கப்பல் 1721 ஏப்ரல் 8 ஆம் தேதி கேப்டன் ஆலிவர் டி பஸ்ஸார்ட் லெவாசியர் தலைமையிலான கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகவும், இது வரலாற்றில் மிகப்பெரிய கடற்கொள்ளையர் தாக்குதல்களில் ஒன்றாகவும் நம்பப்படுகிறது.
இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல்
இந்தியாவிலிருந்து புறப்பட்ட இந்த கப்பலில் 200 அடிமைகளும், பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களும் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த கப்பலில் பயணித்த அடிமைகளுக்கு என்ன ஆனது என்பது இன்றுவரை தெரியவில்லை. நோசா சென்ஹோரா டோ காபோ போர்த்துகீசியப் பேரரசின் ஒரு கப்பலாகும், இந்த கப்பல் கனரக ஆயுதங்களைக் கொண்டிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், அது கைப்பற்றப்பட்டு பின்னர் மூழ்கடிக்கப்பட்டது போர்த்துகீசியப் பேரரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
இந்த கப்பலில் என்னென்ன இருந்தது?
16 வருட தேடுதலுக்குப் பிறகு, மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள நோசி போராஹா தீவுக்கு அருகிலுள்ள அம்போடிஃபோட்டாட்ரா பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பலின் சிதைவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கப்பல் சிதைந்த இடத்திலிருந்து 3,300க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் மதச் சிலைகள், தங்கக் கட்டிகள், முத்துக்கள் மற்றும் பொக்கிஷங்கள் நிறைந்த பெட்டிகள் ஆகியவை அடங்கும்.
மேலும் 'INRI' என்ற வார்த்தைகள் தங்க எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட ஒரு தந்தத் தகடு கண்டுபிடிக்கப்பட்டது. இது 'நாசரேத்தின் இயேசு, யூதர்களின் ராஜா' என்று பொருள்படும் லத்தீன் வார்த்தைகளான Iesus Nazarenus Rex Iudaeorum இன் சுருக்கமாகும். பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிராண்டன் ஏ. கிளிஃபோர்ட் மற்றும் மார்க் ஆர். அகோஸ்டினி ஆகியோர் இந்த சரக்குகளை 'கடற்கொள்ளையர்காலால் கூட நம்பமுடியாத புதையல்' என்று விவரித்தனர். இன்றைய நாணயத்தில் பொக்கிஷங்களின் மதிப்பு £108 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications
