Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் அசர வைக்கும் 10 பாம்புகள்!!!
பாம்புகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அவற்றில் சில பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தைக் கொண்டது. அந்த விஷங்கள் உடலில் சென்றால், உயிர் பிழைப்பதே மிகவும் கடினம். அதே சமயம் சில பாம்புகள் விஷத்தன்மை இல்லாமல் இருக்கும். ஆகவே செல்லப் பிராணிகளை விரும்புபவர்களுள் சிலர், பாம்புகளையும் செல்லமாக வளர்ப்பார்கள்.
உலகில் பல வகையான பாம்புகள் உள்ளன. அவை அனைத்துமே வெவ்வேறு நீளத்தைக் கொண்டவை. சில பாம்புகள் பார்க்கும் போதே பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதிலும் அவை அதன் நீளத்தால் தான் அனைவரையும் பயமுறுத்தும்.
சுவாரஸ்யமான வேறு: சாவதற்கு முன்பு விளையாடி பார்க்க வேண்டிய விளையாட்டுக்கள்!!!
அவற்றில் உலகிலேயே பெரிய பாம்பு தான் பைதான் (Python). இதில் பல வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளத்தில் வளரக்கூடியது. இப்போது உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் நீளமான பாம்புகள் எவையென்று பார்ப்போம்.

ரெடிகுலேட்டட் பைத்தான் (Reticulated Python)
இந்த பாம்பு 7-10 மீட்டர் நீளம் இருக்கும். இது தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் இருக்கும். இது தான் உலகிலேயே மிகவும் நீளமான பாம்பு. ஆனால் இது விஷமில்லாதவை.

பச்சை அனகோண்டா (Green Anaconda)
இந்த பச்சை அனகோண்டா 8.5 மீட்டர் நீளம் வளரக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இதற்கு மேலேயும் வளரக்கூடியது என்றும் ஒரு ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்பதால், இதன் முழுமையான வளர்ச்சியை சரியாக பாதுகாத்து பார்க்க முடியவில்லை.

இந்தியன் பைதான் (Indian Python)
அடர்ந்த ப்ரௌனில் மஞ்சள் அல்லது வெள்ளை கலந்து காணப்படுவது தான் இந்தியன் பைதான். இது 7.6 மீட்டர் நீளம் வளரக்கூடியது.

டைமண்ட் பைதான் (Diamond Python)
இந்த பாம்பு தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும். இது 6.4 மீட்டர் வளரக்கூடியது.

கரு நாகம் (King Cobra)
மிகவும் விஷத்தன்மை வாய்ந்த கரு நாகம் 5.8 மீட்டர் நீளம் வளரக்கூடியது.

மலை பாம்பு (Boa Constrictor)
மலை பாம்பும் மிகவும் நீளமான மற்றும் மற்ற பாம்புகளை விட ஆளையே விழுங்கும் வகையில் உள்ள ஒரு பாம்பு. இது 4.9 மீட்டர் நீளம் வளரக்கூடியது.

புஷ்மாஸ்ட்டர் (Bushmaster)
பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருக்கும் புஷ்மாஸ்ட்டர் பாம்பு 3.7 மீட்டர் நீளம் வளரக்கூடியது. இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.

ஜயண்ட் பிரவுன் பாம்பு (Giant Brown Snake)
உலகில் இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளிலேயே இரண்டாவது கடுமையான விஷத்தைக் கொண்டது தான், ஜயண்ட் பிரவுன் பாம்பு. இது 3.4 மீட்டர் வளரக்கூடியதாக இருந்தாலும், இதன் விஷயம் மனித உடலில் சென்றால் நொடியில் கொன்றுவிடும்.

டயமண்ட்பேக் சாரைப்பாம்பு (Diamondback Rattlesnake)
சாரைப்பாம்பில் ஒரு வகையான இந்த டயமண்ட்பேக் 2.7 மீட்டர் நீளம் வளரக்கூடியது. அதிலும் இந்த வகையான பாம்பில் பெண் பாம்பை விட, ஆண் பாம்பு வேகமாக வளரக்கூடியது.

கருநீல பாம்பு (Indigo Snake)
இந்த கருநீல பெரிய பாம்பு, 2.4-3 மீட்டர் நீளம் வளரக்கூடியது. இதன் மேற்புறத்தில் கருநீல நிறத்துடன், பலவகையான நிறங்கள் கலந்து காணப்படும்.



Click it and Unblock the Notifications